உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

 

27 Responses to “ஆங்கில சொற் போட்டி 2011”

 • சச்சி:

  கெங்கா அவர்களே , ஒரு நாடு இருக்கிறது அதற்க்கு ஒரு அரசாங்கம் இருக்கிறது அந்த அரசாங்கத்துக்கு தலைவராக இருப்பவர் ஜெனாதிபதியவர்கள் .அவர் தனது அமைச்சர்களோடு சேர்ந்து அந்தநாட்டுக்கு நல்லதையே செய்யவேண்டும் என்று நினைக்கும் நல்ல மனிதர். பெயருக்கு ஏற்றால் போல் அவர் செய்வது அத்தனையும் நல்லவையே .நல்லது செய்யும் அவர் பாராளுமன்றத்துக்கு செல்லும் பொது அங்கேதான் இருக்கிறது அவருக்கு பிரச்சனை எதிக்கட்சிகளின் மூலமாக, எதிர் கட்சிகள் வீசும் கேள்விக்கணைகள் (சிலவேளை செருப்புக்கனைகள்)எதிர்கட்சிகளும் நாட்டின் நலன் கருதியே இவற்றை செய்தன என்பது அக்கட்சிக்கு வாக்களித்த மக்களின் கருத்தும்கூட ஆனால் ஜெனதிபதியவர்களோ அவர்களுக்கெல்லாம் பொறுமையாக பதில் அளித்துவிட்டு தன் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தார் .

  அகவே ஜெனாதிபதியின் செயல்ப்பாடும்,எதிக்கட்சியினரின் செயல்ப்பாடும் மக்கள் நலன் கருதியே.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   இவ்வளவு வசனங்கள்கள்கள்கள் முத்து முத்தான, சூப்பர்ஸ்டாரான, கட்சிதமான, சூலக்கருப்பனற்ற சச்சி அவர்களா இவ்வளவு எழுதியது? நம்பமுடியலையே…. 🙂 🙂 🙂 🙂

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   மறந்துவிட்டேன். . கனடா எம்மூர் அரசியல் நிலவரம் தனிக்கட்சியகளல்ல, ஆங்காங்கே உள்ள தனி தனி ஒரு போக்குபிடித்த ஊரோடு ஒத்துபோகாத கொள்கைகளற்ற தனி நபர்கள். இந்த நிலவரம் பலவகை வயது சந்ததியினர் வாழும் சகல புலம்பெயர் நாடுகளிலும் நேரும் வழமையான விடயங்களே

   • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    தனிக்கட்சியகளல்ல = எதிர் கட்சிகளில்ல

  • வணக்கத்திற்குரிய அண்ணன் முத்து அவர்களே எதிர்க்கட்சியினர் இருந்தால் எதுவித கஷ்டங்களும் இல்லை காரணம் அவர்கள் மக்களால்த்தான் நியமிக்கப்பட்டவரகள்.ஆனால் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன்.

 • selvarajah:

  அம்பாள் துணையுடன்,
  உங்கமக்கள் அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு நல்வாழ்துக்கள்.
  வாழ்க வளமுடன்.
  வணக்கத்துடன் பணிப்புலத்து இராசன்.

  • குருவி
   ஐயா , அது என்ன உங் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து, நல்லாய் இல்லை , ஒவ்வொரு சொல்லும் பெறுமதியானதாக & மதிப்பானதாக இருக்க வேண்டும் . தலைக்கனம் ஊடாது. வாக்கை என்பது ஒரு சுழல் சக்கரம் , இதை நாம் நன்று அறிந்து இக்க வேண்டும் .திரும்பி பார்க்கமுதலே எம்மை சூழும் ,

 • சச்சி:

  எனது இணையத்தள நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 • அப்பிடியே கருத்துக் கந்தசாமிகளாகவே இருங்கோ காரியத்தில் கோட்டை விட்டுவிட்டு. இல்லையென்றால் சனசமுகநிலையம் எப்பவோ திருத்தப்பட்டிருக்கும்.

  • அண்ணை ஒன்றுக்கும் அவசரப்படாதையுங்கோ வாசிகசாலைக்கான நிதிகள் தற்போது கனடாவில் திரட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.என்னுடைய நேரடிப் பிரசன்னம் இல்லையென்றாலும் நிதி சேகரிப்பாளர்களுடன் நேரடித்தொடர்பில் இருக்கின்றேன்.அந்த நல்ல உள்ளங்கள் தங்களின் சிரமங்களைப்பாராது ஒவ்வொரு வீடு வீடாக சென்று நிதியைத்திரட்டுகிறார்கள்.அவர்களுக்கு நாங்கள் முதலில் நன்றியைக் கூறிக்கொள்ள வேண்டும்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   Fact&Figure:-
   1/ இந்த கட்டுரையின் தலையங்கம் ‘சொற்போட்டி’;

   2/ பின்னர் ஐரோப்பியர்
   i) நரம்பில்லாத நாக்கு உடையவர்;
   ii) இலவச இணையத்தில் பொழுதுபோக்குபவர்கள்
   (சரி வேலைவெட்டியில்லாதவர்கள் என்று சொன்னாலும் நாம்
   அதை நெஞ்சை உயர்த்தி பெருமையாக ஏற்றுக்கொள்கிறோம்);
   iii)அதில் ஐரோப்பியர் தாம் 3ம் வகுப்பில் படித்த 5ம் வாய்ப்பாடு
   மற(ந்திரு)க்கலாம் ஆனால் கனடாவில் இடம்பெறும் (தமிழ்)நிகழ்ச்சியை
   ஞாபகம் வை(த்திரு)க்காதவர்கள்;
   iv)பாராட்டா(தெரியா)தவர்கள்;
   v)வைக்கலும்+++++ சமமானவர்கள்;

   3/ இப்ப திடீரென்று ‘வாசிகசாலை திருத்துவதற்கு
   ஆதரவளி(த்திரு)க்காதவர்கள்’;

   4/ …….. fill-in da blanks..

   ஏரப்பா ஏரப்பா ஏனப்பா தலையங்கங்களை திசைதிருபபிறீர்கள்… ( 🙂 🙂 🙂 )

   • நான் எழுதும் இவ்விடயம் கூடத் தலையங்கத்திற்கு ஒவ்வாதவை.என்றாலும் வாசகர்கள் எங்கள் அன்பு நண்பர்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக சிலவற்றை தெரியப்படுத்த வேண்டியுள்ளது.
    பொதுச் சங்கங்களின் வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்கு (இனையங்கள் உட்பட) முக்கியமானவையே.இவர்கள் எழுதும் கருத்துக்களையோ அல்லது வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களையோ தரம்பிரித்து எந்தப்பொது அமைப்புக்களுக்கும் தீங்கு விளைவிக்காத பட்சத்தில் அதை பில்ற்ரர் பண்ணி மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். இவ்இனையங்கள் இதை செய்யும் பட்சத்தில் எந்த ஒரு பொது அமைப்புகளின் வளர்ச்சியில் முட்டுக்கட்டை ஏற்படாது.தவறுகளை நாகரீகமான முறையில் வெளிக்கொனர வேண்டும். வாக்கியங்களில் எவரையும் புண்படுத்தாதவாறு அமைதலே மிகச்சிறந்தது.
    ஒரு சிலரின் கருத்துக்களைப் பார்த்தால் ஓடுகிற பேரூந்தில் ஏறி பண்டத்தரிப்பு வந்துவிட்டதா என்று கேட்கின்றமாதிரி அமைகின்றது. முதலில் பேரூந்து எங்கே போகின்றது என்பதை அறிந்து அதில் பயணித்தால்தான் நாம் செல்லவேண்டிய இலக்கை இலகுவாக சென்றடையமுடியும்.இவைகளை நாம் கவனத்தில் எடுப்பது மிகச்சிறந்தது.
    சங்கங்களின் நிர்வாகிகள் எவ்வளவோ கஷ்டத்தின் மத்தியில்தான் பொதுப்பணியில் ஈடுபடுகின்றார்கள்.அவர்கள் தங்கள் வீட்டுவேலைகளை புறந்தள்ளிவிட்டு இதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளார்கள். கனடாவைப் பொறுத்தவரை இது ஒரு இலகுவானகாரியம் அல்ல.இருந்தும் எம்கழக நிர்வாகிகள் முழுமூச்சோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் பலதிசைகளில் இருந்தும் எம்மைநோக்கி கற்கள் வீடப்பட்டுள்ளன. அக்கற்களை நாம் அமைதியான முறையில் ஒன்றுசேர்த்து ஒற்றுமை என்னும் பெட்டகத்திற்குள் பாதுகப்பாக வைத்திருக்கின்றோம்.
    தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டுமாயின்.நாம் ஒன்றுசேர்ந்து என்ன தவறுகள் நடந்துள்ளன எப்படி நடந்துள்ளன எனிவரும் காலங்களில் இப்படியான தவறுகள் நடைபெறாமல் இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்று அலசிப்பார்த்தால் எனிவரும் காலங்கள் நன்றாகவே அமையும்.இது சங்கங்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு குடும்ப வாழ்க்கைக்கும் தேவையானதே.பொறுமையுடன் வாசித்த அனைவருக்கும் நன்றிகள்.
    அன்புடன் உங்கள் கெங்கா கனடாவிலிருந்து.

    • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

     இந்த ‘பொதுவான’ நல்ல விடயத்தை என்னை நோக்கி பதிலளித்திருக்கிறீர்கள் (சில வேளைகளில் பிழையான button ஐ அமத்தினபடியாலாக இருக்கலாம்!!!).
     குழப்பமில்லாமளிருக்க|FGOS:-
     இங்கு நான் மேல் இலக்கங்களுடன் (list-up) ‘திருப்பி’ பாவித்த சொற்கள் என்கருத்துக்கள் அல்ல.
     இதில் என் பங்கு அவற்றை சாராம்சம் ஆக்கியவையே (summerized ).

 • சச்சி [முத்து] அண்ணா உங்கள் கருத்துக்கள் அனைத்தும் முத்து திரைப்படத்தில் ரஐனிகாந் இடையிடையே வந்து மக்களுக்குத்தேவையான நல்லகருத்தைக் கூறுவார் அதுபோன்றுதான் எனக்கு தெரிகின்றது.உங்களைப்போன்றவர்கள் தான் எமக்கு வேண்டும். தொடருங்கள் உங்கள் சேவையை.அருமையான அறிவுரைகள்.எனக்கு ஒன்றுமட்டும் புரியவில்லை சிலர் எதற்காக குலைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   கண்ணா, உன் கருத்துக்குள்ளையே நீ தேடும் பதிலிருக்கு கண்ணா…yeah yeah yeah பாட்ஷா, மா-ர்-நி-க் பாட்ஷா..
   மற்றவர்கள் குரைப்பதால்தான் சச்சி அவர்கள் தன் முத்து முத்தான கச்சிதமான அறிவுரைகளை இடைக்கிடை கூற சந்தர்ப்பம் ஏற்ப்படுகின்றது.
   உங்கள் பாணியில் சொன்னால்:- சச்சி அவர்கள் ஒரு சூப்பர்ஸ்டார், மற்றவர்களெல்லாம் சூலகருப்பன்கள்.
   பாராட்டுவதற்க்குமா புனைப்பெயரில் வரவேண்டும், அழகான நதியே – சிவனின் தலையில் குடியிருப்பவனே – பிரமாண்ட சங்கத்தின் தலையே?
   உங்கள் நகைச்சுவைகளை ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஐரோப்பிய ரகசியர்கள் மன்றம்.
   வப் வப் வப் வப் வப் வப் 🙂 🙂 🙂

   Out ஆண்டனி.

   • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    ரகசியர்கள் = ரசிகர்கள்

   • சுதர்சனுக்கு நன்றிகள்.ஆரம்பத்தில் நான் என் சொந்தப் பெயரில்தான் எழுதினேன்.பின்பு சில பெயர்களை வாடகைக்கு அமர்த்தி எழுதத் தொடங்கினேன்.கூடாத விடயம் என்றாலும் எனிவரும் காலங்களில் என் சொந்தப்பெயரில் எழுதுவதாக இப்புத்தாண்டில் உறுதியளிக்கின்றேன். நான் வாடகைக்கு அமர்த்திய பெயர்கள் எனது உருமத்தில்தான் தற்போதும் இருக்கின்றன. இதன் முடிவுக்காலம் 2013 ஆகும்.எனது வாக்குக் கண்ணை திறந்ததற்கு சுதர்சனுக்கு மிக்க நன்றிகள்.

    • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

     hahaha…நான் கூடாத விடயமாக பார்க்கவில்லை – எல்லாம் அவரவர் விருப்பம்.

     நல்ல ஆரோக்கியமான கருத்துக்களையும், பல நகைச்சுவையான கருத்துக்களையும் எழுதுறீர்கள். ஆரோக்கியமான கருத்துக்கள் வாடகைக்கு அமர்த்த பட்ட பெயர்களில் எழுதும்போது அவற்றை (வாசகர்களால்) வரவேற்கும் தன்மையின் ஆழம் வலுவாக குறைகிறது – இதை நான் அநியாயமாகதான் அனுகிறேன்.

     ஊரில்தான் சொந்த கருத்தை வெளிக்கொள்வதற்கு படிப்பிச்ச ஆசிரியருக்கும், பக்கத்து வீட்டு கிழடுகளுக்கும் (முறை)மாமனாருக்கும் (மரியாதை என்ற ஒரு பொய்போர்வையில்) பயப்படவேணும்…புலம்பெயர்நாடுகளின் சூழ்நிலை வேறு.

     என்ன நீங்கள் வாடகைக்கு அமர்த்திய புனைப்பெயர்களும் உங்கள் நகைச்சுவைதானியங்களை கண்ணாடிபிம்பமாக வெளிக்காட்டுகின்றன. மற்றவர் அடையாளம் கண்டுகொள்வதற்கும் உதவியாக அமைகின்றன…

     உங்கள் (புதுவருட) சபதமும் என் தனிப்பட்ட விருப்பமும் ஒரே அலைவருசையில் சங்கமிக்கின்றன…

     உங்கள் ஐரோப்பிய ரசிகர்கள் மன்றம் – நெதர்லாந்து கிளை…

     Opinions can’t be facts but some of them might be converted into facts!!!!

 • சச்சி:

  இங்கே அவரவர் அபிப்பிராயங்கள்தான் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.எவரும் பிழை கூறவில்லை.

 • நலன்விரும்பி:

  கனடாவில் வாழும் நம்மவர்களின் வேலைப்பளு மத்தியில் இவ்வளவு முயற்சிகள் எடுபதே உண்மையில் பெரிய விடயம். அதை வாழ்த்துவதை விட்டு எல்லா விடயங்களிலும் பிழையை தேடிக் கொண்டிருந்தால்….

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   இந்த தலைப்பில் தலையிட நான் பெரிதாக விரும்பியிருக்கவில்லை ஏனெனில் தனிப்பட்டமுறையில் கனடாவின் சிறப்பான நிலைவரம் நான் நேர கண்டறிந்ததினால்..இருந்தும் ஐரோப்பியர் எம்மை பிரதிநிதிப்படுத்துவதன்பொருட்டு.

   இங்கு ஐரோப்பியவாழ்சிலர் கனடா நிலவரம் அறியாதவர் தம் தாழ்மையான யோசனையோடு கலந்த கருத்தை கேள்வியோடு முன்வைத்திருக்கிறார்கள். அதற்க்கு விளக்கம் கலந்த பதில் கனடா எம்மை பிரதிநிதிப்படுத்துபவர்கள் வைக்கலையும் அதன் சம்பந்தபட்ட விடயங்களையும் இழுக்காமல் தன்மையாக, விளங்கப்படுத்த கூடிய முறையில் பதில்கொடுத்திருந்தால் ஐரோப்பியவாழ் அனைவருக்கும் சரியாக விளங்கியிருக்கும்..

   கருத்துக்களை கனடா தவிர்ந்தவர்களும் இணையத்தில் முன்வைக்கலாம் என்று நாம் ஐரோப்பியர் நம்புகிறோம், அந்த உருமையை சமமாக எடுத்துவிட்டோம். அதற்க்கு நாம் தகுதியற்றவர்களானால் முன்னேற்றமடையாத எம்மை கனடாவாசிகள் மன்னித்துகொள்ளவும்.

   ஏரன் சாருக்கு எடுத்ததற்கும் பிரச்சனைகளை

   ஏவி விடுவதில்

   ஏகன் போல்…

   சி எனக்கும் அடுக்குமொழி பக்டீரியா தொத்திட்டுது … 🙂 🙂 🙂

 • சச்சி:

  கடசிவார்த்தைகள் எல்லை மீறியிருக்கின்றதே.

 • வணக்கம்
  அன்பின் நண்பர்களே உங்கள் கருத்துக்கள் வாசித்தேன். கனடா பண்கலைப் பண்பாட்டுக் கழகத்தினால் நடத்தப்படுகின்ற போட்டிகள் விபரங்கள் எதனையுமே அறிந்திராத நீங்கள் நரம்பில்லாத நாக்கால் எதையும் சொல்லாம் என்பது போல் இலவச இணையத்தில் பொழுது போக்காக கண்டதையும் எழுதலாம் என்பது மாதிரி எழுதித்தீர்த்துள்ளீர்கள். கனடாப் பண்பாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி இதே இணையத்தில் வெளியிட்டிருந்தீர்களே மறந்துவிட்டீர்களா? தமிழ் சொல்வதெழுதல் போட்டியும் அறிவித்தலும் இதே இணையத்தில் வெளியிடப்படுவதையும் மறந்துவிட்டீர்களா? நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் நிகழ்ச்சிகள் தான் நடைபெறுகின்றது. ஆங்கில நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. இந்த நிகழ்ச்சிகள் பதினைந்து வருடங்களாக நடைபெறுகின்றது. நீங்கள் இந்நிகழச்சிகளை நடத்துகின்றவர்களைப் பாராட்டவேண்டும். மாறாக அவர்களுடைய மனம் புண்படும் வகையில் எழுத முயலாதீர்கள். வைக்கல் பட்டடை……..

 • சென்ற வருட ஆங்கிலப் போட்டியின் நடுவர்களை மீண்டும் இந்த வருடம் நடுவர்களாக கடமையாற்ற கரம்கூட்டி வரவேற்கின்றோம்.உங்களுடன் சில புதிய நடுவர்கள் பங்குபற்றுவார்கள்.
  உங்கள் வரவுகளில் ஏதாவது மாற்றம் இருப்பின் தயவு செய்து கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கத்துடன் விரைவில் தொடர்பு கொள்ளவும்.
  நன்றிகள்.
  (647-282 1274) கெங்கா.

 • selvarajah:

  அம்பாள் துணை புரியட்டும்,
  அன்பான எமது உறவுகளே;
  சிறியேனின் தாழ்மையான வேண்டுகோளொன்று.
  கனடாவில் இருக்கும் சிறுவர்களுக்குள் ஆங்கிலச் சொல் எழுத்தறிவுப் போட்டி வைப்பதிலும் பார்க்க தமிழ்த்திறன் போட்டிகள் நடத்துவது நல்லதென்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
  காரணம், அவர்களுடைய முதல் மொழியாகப் பாடசாலைகளிலும் பொதுஇடங்களிலும் ஆங்கிலமே உள்ளது.அதனால் அவர்களுக்குத் தெரிந்த மொழியில் ஊக்கம் கொடுப்பதை விட, அவர்களின் தாய்மொழி மறக்கடிக்கப் படாமலும், அழிந்து விடாமல் பாதுகாக்க தமிழ் எழுத்து, சொல், அறிவுப் போட்டிகளை நடாத்தித் தமிழை கனடாவில் உள்ள எமது பிள்ளைகளிடமும் சேரக்கவேண்டும் எனபதே எனது வேண்டுகோளாகும்.
  இதனைச் செய்யாத தருணத்தில்,பிரான்சு, ஆபிரிக்கா போன்று பெயரளவுத் தமிழரகளாகி விடுவார்கள் எமது எதிர்காலத் தமிழ்ரகள்.
  எனவே நாமும் இந்த்தத் தவறைச் செய்யாமல் முடிந்தவரையில் தமிழை வளர்ப்போமாக.
  முன்பு ஒருகாலத்தில்,ெனது மகன் நன்றாக ஆங்கிலம் பேசுகிறான்,தமிழ் தெரியாது. என்று கூறிய முட்டாள்தனமான நாகரீகம் மாறி, இப்போது எம்மக்கள் தமிழ்போலவே அன்னிய மொழியையும் பேசுகிறாரகள் என்ற அறிவுபூர்வமான நாகரீகம் தோன்றியதை மறக்கமுடிமா?
  தயைகூர்ந்து தமிழை வளருங்கள்.
  வாழ்க தமிழ் மொழி.
  வளர்க கனடா கலை பண்பாட்டுக்களகம்.
  வளருங்கள் தமிழை உங்கள் பிள்ளைகளிடமும்.
  நன்றியுடன் பணிப்புலத்து இராசன்.

 • T.SANKAR:

  தயவு செய்து அங்கிலத்துக்கு எடுக்கும் முக்கியத்துவம் எமது தாய் மொழி தமிழுக்கும் முக்கியத்துவம் எடுக்கவும் ?கலாச்சாரம்

 • T.BALA. pannipulam:

  இந்தப்போட்டிக்கு இந்த சிறு பிள்ளைகளிடம் ஏன் நமது ஊர்,நமது நாடு,நமது கலாச்சாரம்,நமது நட்பு,நமது உறவு,நமது வயோதிபர், இப்படி ஊர் நோக்கிய சிந்தனைகளை கொண்டுவர முயற்ச்சிக்கமுடியாதா அல்லது அது நாகரீகம் இல்லையா இல்லை பெற்றோர் விரும்பவில்லையா.இவரகளை ஊர் நோக்கி கொண்டுபோக மறுக்கும் பட்ச்சத்தில் ஒட்டு மொத்த அடுத்தசந்ததியை பாதைமாற்றியவர்களாய் நாம் மாறி விடுவோம்.ஐரோப்பாவில் என்றும் எப்பவும் மண்நோக்கிய தலைப்பே முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.இதைக் கவனத்தில் கொள்ளவும். பணிப்புலம் த.பாலகுமார் டென்மார்க்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து