உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாதமையினால் அவர் பதவிவிலகத் தேவையில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரிஷாட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமையினால், அவரை தற்காலிகமாக பதவி விலக்கினால் மாத்திரமே தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வை பெற முடியுமென ஐ.தே.க.சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

ஆனால் குறித்த கோரிக்கையை பிரதமர் மறுத்ததாகவும் தாக்குதலோ அல்லது வேறு எந்தவொரு குற்றங்களோ ரிஷாட் மீது முன்வைக்கப்படாதமையினால் அவர் பதவி விலகத் தேவையில்லையென ரணில் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பதவிவிலக வேண்டுமென பெரும்பாலான அரசியல்கட்சிகள், பொதுஅமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்ற நிலையில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து