உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

தெற்கு லண்டன் பகுதியில் 5 வயது இலங்கை தமிழ்ச்சிறுமி துஷாரா கமலேஸ்வரனை துப்பாக்கியால் சுட்ட 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஒரு கும்பல் மதுபானம் அருந்தும் கடையொன்றில் அமர்ந்து இங்கிலாந்து, கானா மோதிய நட்பு ரீதியலான கால்பந்துப் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தது.

அந்தக் கும்பலுக்கு எதிரான 3 பேர் சைக்கிளில் துப்பாக்கியுடன் வந்தனர். அந்தக் கும்பலில் இருந்த 19 வயது இளைஞர் தங்களது விரோதக் கும்பலை பார்த்ததும் துப்பாக்கியை அலட்சியமாக எடுத்து சரமாரியாக சுட்டார்.

இந்த திடீர் தாக்குதலில் ஸ்டாக்வெல் புட் கடையில் நின்று கொண்டிருந்த 5 வயது இலங்கை தமிழ்ச் சிறுமி துஷாரா குண்டடிபட்டார். இதேபோன்று ஸ்டாக்வெல் புட் மற்றும் வைன் கடையில் வேலைபார்க்கும் 35 வயது ரோஷன் செல்வக்குமாருக்கும் காயம் ஏற்பட்டது.

குண்டடிப்பட்ட துஷாராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த சிறுமி தனது மாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க வந்த போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. துஷராவுக்கு 3 அவசர நிலை ஓபரேஷன்கள் மேற்கொள்ளப்பட்டன.

துப்பாக்கித் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க உதவும் நபருக்கு 50 ஆயிரம் பவுண்ட் பரிசுத்தொகையை ஸ்டோர் மற்றும் குற்றத்தடுப்பு சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் துப்பாக்கியால் தாக்கிய 19 வயது இளைஞரை பொலிசார் நேற்று இரவு கைது செய்தனர்.

குண்டடிப்பட்ட அபாய நிலையில இருக்கும் சிறுமி துஷாரா தனது 12 வயது சகோதரர் மற்றும் 3 வயது சிறுமியுடன் வந்தபோது சுடப்பட்டார். மகள் ரத்தவெள்ளத்தில் துடிப்பதைக்கண்ட அவரது தாயார் கதறி பொலிசாரை அழைத்தார்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து