உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இத்தாலிக்கு அண்மையில் உள்ள சிசிலிக்கு தெற்கே, லம்பேடுசா தீவின் கரையிலிருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர் என இன்று (திங்கட்கிழமை) இத்தாலியின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 50 பேரை ஏற்றிச் செல்லும் படகு ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கை கிடைத்தது என்றும் இதனை அடுத்து மீட்பு கப்பல்களின் உதவியுடன் 22 பேரை மேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த கப்பலில் இருந்தவர்களை தேடிவருவதாகவும் இத்தாலியின் கடலோர காவல்படை கூறியுள்ளது.அத்தோடு குறித்த பகுதியில் கடலோர காவல்படை மற்றும் பொலிஸாரின் படகுகள் தேடுதல் நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து