உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

HSBC Holdings நிறுவனத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுமார் 10,000 பணியாளர்களை ஆட்குறைப்புச் செய்யத் திட்டமிட்டு வருவதாக ஃபைனான்ஷியல் ரைம்ஸ் (Financial Times) செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
அதிக ஊதியம் பெறும் பணியாளர்கள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகயால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.HSBC வங்கியின் இந்தக் காலாண்டிற்கான வர்த்தக அறிக்கையை வெளியிடும்போது ஆட்குறைப்பு முயற்சிகள் பற்றி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சவால்மிக்க சர்வதேச சூழலுக்கேற்ப நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பு மாறவேண்டும் என HSBC வங்கிக் குழுமத்தின் தற்காலிகத் தலைமை நிர்வாக அதிகாரியான நோயெல் குவின் (Noel Quinn) குறிப்பிட்டுள்ளார்

ஏற்கனவே, சுமார் 4,000 பணியாளர்களை இந்த வருட ஆரம்பத்தில் ஆட்குறைப்புச் செய்வதாக HSBC அறிவித்திருந்தது.ஹொங்கொங்கின் பதற்றமான சூழல், அமெரிக்க-சீன வர்த்தகப் போர், பிரெக்ஸிற் ஆகியவற்றை மேற்கோட்காட்டி HSBC நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து