உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஐஸ் ரக போதைப்பொருளுடன் தாய் மற்றும் மகள் ஆகியோர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (07) இரவு விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

68 வயதுடைய தாய் மற்றும் 36 வயதுடைய மகள் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் வத்தளை மற்றும் மட்டக்குளி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவுக்கு சென்று மீண்டும் நாடு திரும்பிய குறித்த தாய் மற்றும் மகளின் பயணப்பொதிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போதே, 2 கிலோ 500 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ௯றப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ரூபா 25.4 மில்லியன் பெறுமதியான, இரு பொதிகளில் மிகவும் சூட்சகமான முறையில் பொதியில் அடைக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து