உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

தடை செய்யப்பட்ட அமைப்பினை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் நான்கு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
லண்டனின் லுட்டான் விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் லூட்டன் விமான நிலையத்துக்கு சென்ற நிலையில், இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் மற்றும் குற்றவியல் சான்றுகள் சட்டம் 1984 இன் கீழ் , குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பயங்கரவாத சட்டம் 2000இன் கீழ் தடுத்து வைக்கப்ப்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

39, 35 மற்றும் 41 வயதுடைய சந்தேக நபர்கள் தெற்கு லண்டன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவர் உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து