உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கொழும்பு – கொம்பனித்தெரு, யூனியன் பிரதேசத்தில் உள்ள விருந்தகம் ஒன்றின் 33ஆவது தளத்தில் இருந்து கீழே விழுந்து வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.52 வயதுடைய அவுஸ்ரேலிய நாட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு தினங்களுக்கு முன்னர், குறித்த நபர் தனது நண்பர் ஒருவருடன் அந்த விருந்தகத்தில் தங்கியிருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) இரவு அறையில் தனித்திருந்த அந்த நபர் அறையிலிருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் நண்பரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள கொம்பனித்தெரு பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து