மறுமலர்ச்சி மன்ற அபிவிருத்திக் கட்டுமானப் பணிகள் தொடர்பான அறிவித்தல்.
பண்கலை பண்பாட்டுக் கழகம்-கனடா…April மாதம் 3ஆம் 2011 திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா செல்வச்சன்நிதி ஆலய மண்டபத்தில் பண்கலை பண்பாட்டுக்கழக தற்போதைய நிர்வாகசபையிற்கும் மறுமலர்ச்சி மன்றம்-கனடா அங்கத்தினர்களிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பின்வரும் தீர்மானம் ஆராயப்பட்டு கனடா வாழ் பணிப்புலம் மக்களிடம் அதனை எடுத்துச்செல்வது என உடன்பாடு காணப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் தற்போது மறுமலர்ச்சி மன்றத்தினால் எமது ஊரவர்களின் இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட கட்டுமானப் பணிகள் தொடர்பாக்க் கலந்துரையாடப்பட்டது. இப் பாரிய திட்டத்தினால் பயன்பெறப்போவது எமது முளுக்கிராமமும் என்பதை அடிப்படையாக வைத்தே மேற்ப்படி விடயமானது ஆய்வுக்கு எடுத்துத்கொள்ளப்படது. எமது ஊர் மக்கள் அனைவரினதும் ஒன்றுபட்ட ஒத்துழைப்புடன் மறுமலர்ச்சி மன்ற வளவில் தொடங்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டக் கட்டுமானப் பணிகளுக்கு கனடா பண்கலை பண்பாட்டுக்கழகமும் தனது ஒத்துழைப்பை வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சகல கனடா வாழ் பண்கலை பண்பாட்டுக்கழக அங்கத்தினர்களையும் ஒன்றுகூட்டும்முகமாக பொதுக்கூட்டம் ஒழுங்குசெய்யப்படவுள்ளது. இப்பொதுக்கூட்டம் நடைபெற இருக்கும் கால, நேரம் மற்றும் இடம்பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். அத்துடன் இதுசம்பந்தமான அழைப்புக்கள் தொலைபேசி ஊடாக விடுக்கப்படுவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படும்.
நன்றி.
பண்கலை பண்பாட்டுக்கழகம்-கனடா
மறுமலர்ச்சி மன்றம்-கனடா.
கனடியத் தமிழ் வானொலியினால் நடத்தப்படும் சிறுகதைப் போட்டியில் இணைந்து கொள்ள விரும்புகின்றவர்கள் 20 நிடங்களுக்குள் வானொலியில் வாசிக்கத்தக்க வகையில் சிறுகதைகளை அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: venthanctr@yahoo.ca or venthan@ctr24.com
http://WWW.ctr24.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
இந்தக் கருத்து எழுதியவர் யார் என்று தெரியவில்லை. அதனால் நாங்கள் இங்கு வெளியிடவில்லை….
இரண்டு மணிநேர விவாதமென்பது மிக குறைவு விட்டால் 2வருட வரைவிவாதம் செய்து கொண்டிருப்பார்கள்.
பிரச்சனைகளுக்கு விடையைக் காண்கிறோமா, அல்லது
விடைக்குள் பிரச்சனைகளைப் போடுகிறார்களா,
மறுமலர்ச்சி மண்றமும் சனசமூகநிலையத்தினதும் கட்டுமாணபனப் பணிகள் ஆரம்பித்து நிறைவுபெற வாழ்த்துக்கள்
“பூங்காவனத்தில் பூக்களைப் பாருங்கள் புற்களைப் பார்க்காதீர்கள்”
மனதில் பதிந்த வாசகம்
மறுமலர்ச்சி மன்றம்-கனடா.1
பண்கலை பண்பாட்டுக்கழகம்-கனடா 2 two in canada not one
பண்கலைக்கூடத்தின் முடிவு வரவேற்க்கலாம்.ஆனால் பணிப்புலம் வாசிகசாலை விடயத்தில் மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என புரியாமல் உள்ளது.ஓம் என்பதும் இல்லை என்பதும் உங்கள் உரிமை உங்கள் வளமையுமாகும்.இதை விட தற்ப்போது சமூக மேம்பாட்டு அபிவிருத்தி திட்டம். பணிப்புலம்,காலையடி,காலையடிதெற்க்கு,சாந்தை என பெயர்மாற்றம் பெற்றுள்ளதால் இதையும் கவனத்தில் எடுக்கவேண்டும்.ஆனாலும் ஊரின் அமைப்புகள் அந்த ஊரில் எல்லாப்பணிகளையும் சமமாக பார்த்து உதவிக்கரம் கொடுப்பதே நன்று.உங்கள் பாகுபாடானபோக்கு பலரிடம் பல கேள்விகளை இன்று கனடாவில் உருவாக்கியுள்ளது. மறுமலர்ச்சியான்
மறுமலர்ச்சியான் என்ற புனை பெயரில் எழுதும் உங்களுக்கு ஒரு சிறிய விளக்கம்- அம்பாள் சனசமூக நிலையம் சம்பந்தமாக இதுவரை பண்கலை பண்பாட்டுக்கழகத்தினரிடம் அதிகாரபூர்வமாக புலம்பெயர்நாடுகளிலிருந்தோ அல்லது சனசமூகநிலைய நிர்வாகத்துனரிடமிருந்தோ எந்தவிதமான வேண்டுகோள்களும் பெறப்படவில்லை என்பதே உண்மை. முன்பள்ளி இடமாற்றுவது தொடர்பாக பண்கலை கலாட்ச்சாரக்கழகம் எடுத்த முயற்ச்சிக்கு ஊரில் இயங்கிக்கொண்டிருக்கும் முன்பள்ளிக்குப் பொறுப்பாக இருக்கும் வாசிசாலை நிர்வாகத்தினர் ஒப்புதல் தரவில்லை என்பதே உண்மை. இதற்கான விளக்கம் கனடா பண்கலை பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் ஏற்கனவே அறிக்கை மூலம் விளக்கப்பட்டுள்ளது. சனசமூக நிலைய பழைய நிர்வாகிகள் அதன் புனர் நிர்மாண வேலைகளைக் கொண்டு செல்வதில் பண்கலை பண்பாட்டுக்கழகத்தினருக்கு எந்தவிதமான ஆட்சேபனைகளும் இல்லை என்பதும் அதே அறிக்கையில் குறிப்பட்டிருப்பதையும் நீங்கள்கவனித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.
மேலும் மறுமலர்ச்சிமன்றம் தொடர்பான கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயமாக உங்களுக்கு மேலதிக விளக்கம் தேவைப்படின் அன்றைய கூட்டத்தில் சமூகமளித்து ஏறக்குறைய 2 மணி நேரத்திற்கு மேலாக விவாதங்களில் ஈடுபட்ட 15 பேர்களில் ஒருவருடனாவது நேரடியாகக் கதைத்து உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதே நன்று.
கனடியத் தமிழ் வானொலியினால் நடத்தப்படும் சிறுகதைப் போட்டியில் இணைந்து கொள்ள விரும்புகின்றவர்கள் 20 நிடங்களுக்குள் வானொலியில் வாசிக்கத்தக்க வகையில் சிறுகதைகளை அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: venthanctr@yahoo.ca or venthan@ctr24.com
http://WWW.ctr24.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.