உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

அமெரிக்காவின் அண்டை நாடான கியூபாவுக்கு அமெரிக்க விமானங்கள் செல்ல டிசம்பரில் தடை விதிக்கப்படவுள்ளது.அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் கியூபாவுக்கு செல்வர்கள் மூலமாக கியூபா அரசுக்கு கிடைக்கும் வருமானத்தை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கருதுகின்றன.

அமெரிக்க ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி சான்ட்டா கிளாரா, சாண்டியாகோ, ஹோல்குய்ன் உள்ளிட்ட கியூபா நாட்டில் உள்ள 9 முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானச் சேவைகளை நிறுத்த அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

எனினும், கியூபாவின் ஹவானா நகரில் உள்ள ஜோஸ் மார்ட்டி சர்வதேச விமான நிலையத்துக்கு மட்டும் அமெரிக்க விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ட்ரம்ப் அரசின் இந்த அதிரடி முடிவுக்கு கியூபா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மக்களின் சுதந்திரத்தையும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகளையும் பறிக்கும் இந்த நடவடிக்கையால் எங்களுக்கு எந்த பாதிப்பும் வந்து விடப்போவதில்லை என கியூபா வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிகுவெஸ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து