உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் இளம் குடும்பப் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு10 மாதக் கைக்குழந்தை உள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் 2ஆம் வாய்க்காலில் இந்தச் சம்பவம் இன்று காலைஇடம்பெற்றது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தில் அன்ரன் ஜெயராஜ் மேரி அகிலா ( வயது -29) என்பவரே கொல்லப்பட்டார்.“அவரது கணவர் தொழில் நிமித்தம் வவுனியா சென்றிருந்த வேளை வீட்டில் குழந்தையுடன் இருந்தசமயம் இந்தக் கொலை இடம்பெற்றதாக தகவல் வழங்கப்பட்டது.

அவரது உடலில் காயங்கள் காணப்படுகின்றன. நீதிவான் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரியின்
விசாரணையின் பின்னரே மேலதிக தகவல்கள் வெளியிட முடியும்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து