உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

திருகோணமலை – கந்தளாயில் தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் பேச்சினால் ஆத்திரமடைந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், அவரை விரட்டியடித்தனர்.

கந்தளாயில் நேற்றிரவு தேசிய காங்கிரஸினால் பொது ஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே குழப்ப நிலை ஏற்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி இன்று சின்னாபின்மாகிக் கொண்டிருக்கின்றது துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று றிசாட் மற்றும் ஹக்கிமின் மனைவி மார்கள் மகளிர் மஜ்லிஸ் நடாத்தி வருகின்றார்கள் என்றவுடன் ஆத்திரமடைந்த ஆதரவாளர்களினால் மேடையை நோக்கி கற்களை வீசியதோடு,

தலைக்கவசத்தாலும் வீசி அடித்தார்கள். இதனால் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பாதுகாப்பு பிரிவினால் பாதுகாப்பாக மேடையை விட்டு இறக்கப்பட்டு கூட்டிச் செல்லப்பட்டார். பின்பு பொலிஸார் குழப்ப நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து