உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபஷ தொடர்பில் தரக்குறைவான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வந்த குற்றச்சாட்டின்பேரில் இருவரை பொலிஸார் நேற்று மிரிஹான பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
மேற்படி சந்தேக நபர்கள் இருவரும் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மேற்படி கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவிடம் பணியாற்றுபவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் அமைச்சர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் தான் இது தொடர்பில் எதனையும் அறிந்து வைத்திருக்கவில்லையென்றும் இவ்வாறான சம்பவங்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் தான் இடமளிக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

எனது ஒன்பதரை வருட வரலாற்றில் நான் எவர் மீதும் சேறு பூசும் அரசியல் செய்ததில்லைஇது எனக்கு தெரியாமல் இடம்பெற்றதொரு நிகழ்வு.இது பற்றி எனக்கு தெரிந்திருந்தால் நான் எச்சந்தர்ப்பத்திலும் இதற்கு இடமளித்திருக்க மாட்டேன். இதனால் இடம்பெற்ற அசெளகரியத்துக்காக நான் அனைவரிடமும் மன்னிப்பு கோருகின்றேன்,” என்றும் அமைச்சர் கேட்டுக்ெகாண்டுள்ளார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து