உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் மட்டும் 55 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 34.5 அடியாக உயர்வடைந்ததோடு இரணை மடுவின்  14 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. மேலும் அக்கராயனில் 238.9 மில்லிமீற்றர் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற கால நிலையைத் தொடர்ந்து வடக்கில் பெய்யும் தொடர்மழையால் 17 ஆயிரத்து 62 குடும்பங்களை சேர்ந்த 55 ஆயிரத்து 453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொடர்மழையால் குளங்களின் நீர்மட்டம் அதகரித்துள்ளதுடன், தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 874 குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 நலன்புரி நிலையங்களில் 57 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 198 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 6841 குடும்பங்களை சேர்ந்த 22262 பேர் வெள்ள அனர்த்தத் தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

21 நலன்புரி நிலையங்களில் 920 குடும்பங்களை சேர்ந்த 2906 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன். மாவட்டத்தில் 37 வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளது
வவுனியா மாவட்டத்தில் 283 குடும்பங்களைச் சேர்ந்த 887 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 55 வீடுகள் பகுதியளவு பாதிப்படைந்துள்ளன.

மேலும் வவுனியா வடக்கில் மருதோடை, இராமனூர், பழையவாடி, புளியங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 4 நலன்புரி நிலையமும், செட்டிகுளம் அடைக் கலமாதா வித்தியாலயத்தில் ஒரு நலன்புரி நிலையமும் அமைக்கப் பட்டுள்ளது.

நலன்புரி நிலையங்களில் 152 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் 9ஆயிரத்து 297 குடும்பங்களை சேர்ந்த 30 ஆயிரத்து 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

15 நலன்புரி நிலையங்களில் 323 குடும்பங்களை சேரந்த ஆயி ரத்து 60 பேர் தங்க வைக்கப்பட் டுள்ளனர்.மன்னார் மாவட்டத்தில் 594 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 154 பேர் 6 நலன்புரி நிலையங்களில் 80 குடும்பங்களை சேரந்த ஆயிரத்து 389 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து