உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

காளான் முட்டை மசாலா

தேவையான பொருட்கள்

காளான் – ஒரு கப்

பெரிய வெங்காயம் – ஒன்று
முட்டை – ஒன்று

கறுவ – ஒன்று
தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கராம்பு – 2
தக்காளி – ஒன்று
சோம்பு – அரை தேக்கரண்டி
பூண்டு – 2 பல்
உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை :

பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை நறுக்கி கொள்ளவும்.காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.பூண்டினை தோலுரித்துக் சிறியதாக நறுக்கி கொள்ளவும்.

சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறுவ,கராம்பு மற்றும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் அதில் பூண்டு மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்..

தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.மசாலா பச்சை வாசனை போனவுடன் பின்னர் காளான்   போட்டுலேசாக வதக்கவும்.காளான் நன்கு வெந்த பின்பு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து