உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடாவில் இன்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 6 பேர் பலியானதுடன் 23 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கன்ரர் ரக வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

அம்பாறையிலிருந்து சிலர் மேற்படி கன்ரர் வாகனத்தில் உல்லே பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வரும் வழியிலேயே காஞ்சிரங்குடா சாகம வீதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதி திடீரென வாகனத்தின் பிறேக்கை அழுத்தியபோது அவ்வாகனம் சரிந்து விழுந்தது. இவ்வாகனத்தில் பயணம் செய்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து