உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பிரிட்டனில் கூடுதல் குடியேற்ற நிகழ்வுகள் ஏற்படுவதால் அதிக சிரமங்களும், சமூகத்தில் பிணைப்பு இல்லாத நிலையும் ஏற்படுகிறது என பிரதமர் டேவிட் காமரூன் கடுமையாக சாடினார்.
பிரிட்டனின் கலாசார நலன் கருதி குடியேற்ற நடவடிக்கைகளை குறைக்க பிரிட்டன் அரசு திட்டமிட்டு உள்ளது. மாணவர்கள் விசா எண்ணிக்கையையும், தொழிலாளர்கள் விசா எண்ணிக்கையையும் குறைக்க காமரூன் திட்டமிட்டு உள்ளார்.

பிரிட்டன் தொழிலாளர்கள் நலவாழ்வு நடவடிக்கையை உரிய முறையில் எதிர்கொள்ளாத வரை, குடியேற்ற நிகழ்வை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் என காமரூன் கூறினார்.

பிரிட்டனில் தற்காலிகமாக தங்குவதற்கான விசாக்கள் பெறவும், நிரந்தர விசாக்கள் பெறவும் விதிமுறைகள் கடுமையாக்கப்படுகின்றன. கடந்த 1997ம் ஆண்டு முதல் 25 லட்சம் புதிய பிரிட்டன் வேலை வாய்ப்புகளில் 75 சதவீதத்தை அயல்நாட்டு தொழிலாளர்களே பெற்றுள்ளனர்.

குடியேற்ற நிகழ்வால் ஏற்படும் பிரச்சனையாக இது இல்லை. நமது வேலைகளில் நாம் காட்டும் சுணக்கமே இதற்கு காரணம் என பிரதமர் கருதுகிறார்.

பிரிட்டனின் வேலை சந்தை அயல் நாட்டு தொழிலாளர்களாலேயே நிரப்பப்பட்டுள்ளது. 1997ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை 22 லட்சம் அயல்நாட்டு மக்கள் பிரிட்டனில் குடியேறி உள்ளனர் என பிரதமர் காமரூன் கூறினார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து