உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வெளிநாட்டவா்களுக்கு கொரோனா தொடா்பாக விழிப்புணா்வூட்டிய மருத்துவா் மற்றும் பல்கலைகழக ஊழியா் மீத தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட றியோ ஐஸ்கிறீம் விற்பனை நிலைய ஊழியா்கள் இருவரும் 31ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனா்.
தனிமைப்படுத்தல் சோதனைக்குட்படாமல் நாட்டுக்குள் நடமாடும் வெளிநாட்டவா்களை குறித்து றியோ ஐஸ் கிறீம் விற்பனை நிலைய ஊழியா்களுக்கு விழிப்புணா்வூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மருத்துவா் மற்றும் பல்கலைகழக ஊழியா் மீது றியோ ஐஸ்கிறீம் விற்பனை நிலைய ஊழியா்கள் தாக்குதல் நடாத்தியிருந்தனா்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவா் நீதிமன்றில் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனா். இதேவேளை சம்பவத்துடன் தொடா்புடைய பலா் கைது செய்யப்படாமல் உள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து