உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வலிகாமம் வடக்கில் கசிப்பு காய்ச்சுவதற்குத் தயாராக இருந்த இடம் புலனாய்வுத் துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது இதன் போது சந்தேகத்தில்ஒருவரைக் கைது செய்துள்ளதுடன் கசிப்பு காய்ச்ச தயாரான நிலையிலிருந்த ஒரு தொகுதி உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி பகுதியில் கசிப்பு காய்ச்சும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பலாலி விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசிய தகவலொன்று கிடைக்கப் பெற்றுள்ளது.இதனையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த புலனாய்வுப் பிரிவினர் அங்கு ஒருவரைக் கைது செய்துள்ளதுடன் உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்துகின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு பருகின்றனர்.
கொரோனோ தொற்று தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் மதுபான சாலைகளையுமு; பூட்ட வேண்டுமென்று அரசு அறிவித்தள்ளது.

இவ்வாறான நிலையிலையே கசிப்பு காய்ச்சும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அந்த முயற்சி புலனாய்வாளர்களால் முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து