உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

நிகழ்வுகளை திருமதி  பரமேஸ்வரி சுப்பிரமணியம்  மங்கள விளக்கேற்றி நிகழ்சிகளை ஆரம்பித்து வைத்தார்.  இந்து இறைவணக்கம் செலுத்தபட்டது – பாடியவர் சிவசுப்ரமணியம். கிறீஸ்தவ இறைவணக்கம் செலுத்தபட்டது – ஜெபித்தவர் சிவநேசன் . வரவேற்புரை+முன்னுரை  – சச்சிதானந்தம்.நெதர்லாந்து, ஜேர்மனியிலிருந்து  சமூகமளித்த அனைவரையும் வரவேற்று இந்த ஒன்றுகூடல் சாத்தியப்படுவதற்கு உதவி செய்த அனைவருக்கும், உணவுகள், பலகாரங்கள், குடிபானங்கள், விளையாட்டு பரிசில்கள், மற்றும் தேவைகளை பூர்த்தி செய்தவர்களுக்கும் நன்றிகள் கூறினார்.  மேலும் எமது தகவல்பரிமாற்றங்களுக்கு உதவி புரிந்த Panippulam.com, Panipulam.net, Kaladdi.comt  & Kalaiyadi.net  அனைத்து இணையங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

———————————————————–

Ø  விளையாட்டுக்கள்

o   சிறுவர்களுக்கான தடையோட்டம் –  வயது  5+                         |  Hordeloop Kinderen boven de 5 jaar.

   தடைகள்: chocolate + பாண் + குடிபானம்                                    |  Horden: chocolade + broodje + drinken

முதலாவது இடம் | 1e prijs   :  சியாம் சிவராஜா                           | Chiyaam Sivaraja

இரண்டாவது இடம் | 2e prijs: சியான் செல்வகுமார்                  | Chiyaan Selvakumar

மூன்றாவது இடம் |  3e prijs  : கிரியோன் செல்லையா           | Kiriyon Chellaia

———————————————————–

o   சிறுவர்களுக்கான தடையோட்டம் –  வயது  5                       |  Hordeloop Kinderen onder de 5 jaar.

   தடைகள்: chocolate + குடிபானம்                                                    |  Horden: chocolade + drinken

முதலாவது இடம் | 1e prijs   :  சனந்தா                                             | Sanantha

இரண்டாவது இடம் | 2e prijs: ராஜி                                                    | Raaji

மூன்றாவது இடம் |  3e prijs  : கவிதா                                              | Kavitha

———————————————————–

o   தேசிக்காய் ஓட்டம் பெண்கள்                                                           | Lopen met Citroen Meisjes

                       வயது  20-                                                                                                 onder de 20 jaar

முதலாவது இடம் | 1e prijs   :  சர்மிளா                                             | Charmila

இரண்டாவது இடம் | 2e prijs: தர்மினி                                              | Tharmini

மூன்றாவது இடம் |  3e prijs  : ஜபிட்டா                                          |  Jabitta

———————————————————–

o   தேசிக்காய் ஓட்டம் பெண்கள்                                                           | Lopen met Citroen Vrouwen

                       வயது  40-                                                                                                 onder de 40 jaar

முதலாவது இடம் | 1e prijs   :  சுகந்தி இமயம்                               | Suganthi Imayam (Germany)

இரண்டாவது இடம் | 2e prijs: பவானி செல்வகுமார்                    | Bawani Selvakumar

மூன்றாவது இடம் |  3e prijs  : திருமணி + சசிகலா                   | Thavam + Sasikala

———————————————————–

o   தேசிக்காய் ஓட்டம் பெண்கள்                                                           | Lopen met Citroen Vrouwen

                       வயது  40+                                                                                                   boven de 40 jaar

முதலாவது இடம் | 1e prijs   :  திரவியம்                                          | Thiraviyam

இரண்டாவது இடம் | 2e prijs: நகுலேஸ்                                         | Nagules

மூன்றாவது இடம் |  3e prijs  : திருமதி சிவராஜா                       |  Mrs Sivaraja

———————————————————–

o   தடையோட்டம்    சிறுவர்கள்  வயது 10+                                      | Hordeloop Jongens boven de 10 jaar

             தடைகள்: தேசிக்காய் + பாண் + குடிபானம் + பலூன்             |  Horden: citroen + broodje + drinken + ballon

முதலாவது இடம் | 1e prijs   :  சுகிர்தன் சச்சிதானந்தன்           | Sugirthan Sachithaananthan

இரண்டாவது இடம் | 2e prijs: ஸ்டீபன் சிவநேசன்                     | Steeban Sivanesan

மூன்றாவது இடம் |  3e prijs  : ஜேம்ஸ் சிவநேசன்                    |  James Sivanesan

———————————————————–

 

o   தடையோட்டம்    ஆண்கள்    வயது 40-                                         | Hordeloop Heren onder de 40 jaar

             தடைகள்: தேசிக்காய் + பாண் + குடிபானம் + பலூன்             |  Horden: citroen + broodje + drinken + ballon

முதலாவது இடம் | 1e prijs   :  இமயம்                                              | Imayam (Germany)

இரண்டாவது இடம் | 2e prijs: செல்வா                                            | Selva

மூன்றாவது இடம் |  3e prijs  : சுதர்சன்                                            |  Sutharsan

———————————————————–

o   தடையோட்டம்    ஆண்கள் வயது 40+                                           | Hordeloop Heren boven de 40 jaar

             தடைகள்: தேசிக்காய் + பாண் + குடிபானம் + பலூன்             |  Horden: citroen + broodje + drinken + ballon

முதலாவது இடம் | 1e prijs   :  சிவசுப்ரமணியம்                          | Subru

இரண்டாவது இடம் | 2e prijs: சச்சி                                                    | Sachy

மூன்றாவது இடம் |  3e prijs  : சிவராஜா                                         |  Sivaraja

———————————————————–

o   சங்கீதகதிரை  சிறுவர்கள்                                                                   | Stoelendans Kinderen

முதலாவது இடம் | 1e prijs   :  ஜபினா செல்வகுமார்                 | Jabina Selvakumar

இரண்டாவது இடம் | 2e prijs: ஜதுர்ஷன் ஈசன்                             | Jathurshan Easan

மூன்றாவது இடம் |  3e prijs  : கிஷாந் இமயம்                            |  Kishanth Imayam

o   சங்கீதகதிரை  பெண்கள்                                                                      | Stoelendans Vrouwen

———————————————————–

முதலாவது இடம் | 1e prijs   :  பிரியா சிவசுப்ரமணியம்           | Priya Sivasubramaniam

இரண்டாவது இடம் | 2e prijs: சுகந்தினி இமயம்                         | Suganthini Imayam

மூன்றாவது இடம் |  3e prijs  : யாழினி                                            |  Yaalini (Germany)

———————————————————–

o   சங்கீதகதிரை ஆண்கள்                                                                                    | Stoelendans Heren

முதலாவது இடம் | 1e prijs   :  பாலன் சிவானந்தம்                                | Balan Sivaanantham (Germany)  

இரண்டாவது இடம் | 2e prijs: கோணேஸ்வரன் கோர்க்கியார்         | Koneshwaran Korkiyaar

மூன்றாவது இடம் |  3e prijs  : ஸ்டீபன் சிவநேசன்                               | Steeban Sivanesan

———————————————————–

o   அதிஷ்ட எண்கூட்டம் தேடல் (சகலதரப்பினரும்)                               | Bingo (alle leeftijdsgroepen)

1.    மின்பொரியல்சாதனம்/ Deep electronic fryer                                        | Electrische Frituurpan

வென்றவர்:   ரூபன் குடும்பம்                                                                     Familie Ruban

2.    Rice cooker                                                                                                         | Rijstkoker

வென்றவர்:  சச்சி குடும்பம்                                                                          Familie Sachy.

3.    பாண்/றொட்டி  சூடாக்கிறது                                                                     | Broodrooster/Toaster     

      வென்றவர்:  பாலன் குடும்பம் (Germany)                                                 Familie Balan  (Germany)    

 

4.    தொலைபேசியட்டை €20 பெறுமதியான                                           | Simkaart/Sim card €20

                  வென்றவர்: செல்வா குடும்பம்                                                                  Familie Selva 

           

5.    தொலைபேசியட்டை €20 பெறுமதியான                                           | Simkaart/Sim card €20

                  வென்றவர்: கோணேஸ் குடும்பம்                                                           Familie Konesh

 

6.     தொலைபேசியட்டை €20 பெறுமதியான                                          | Simkaart/Sim card €20

                      வென்றவர்: சிவநேசன் குடும்பம்                                                          Familie Sivanesan

———————————————————–

Ø  நிர்வாகிகள் தெரிவு

ஆலோசகர்: சிவானந்தம்.  முன்மொழிந்தவர் சுதர்சன் – கூட்டத்தில் ஆட்சேபனை கேட்கப்பட்டது – எதுவும் இல்லை.

தலைவர்: சச்சிதானந்தம்.   முன்மொழிந்தவர் சிவசுப்ரமணியம் – கூட்டத்தில் ஆட்சேபனை கேட்கப்பட்டது – எதுவும் இல்லை.

பொருளாளர்: செல்வகுமார் சற்குணசிங்கம்  முன்மொழிந்தவர் சுரேஷ் சிதம்பரி – கூட்டத்தில் ஆட்சேபனை கேட்கப்பட்டது – எதுவும்

        இல்லை.

            செயலாளர்சுதர்சன் சூரசங்காரன் . முன்மொழிந்தவர் சிவசுப்ரமணியம் – கூட்டத்தில் ஆட்சேபனை கேட்கப்பட்டது – எதுவும் இல்லை.

                                                சுதர்சன் முதலில் ஏற்றுக்கொள்வதற்கு மறுத்தார்.

உபதலைவர்: தினேசன் சிவசுப்ரமணியம் முன்மொழிந்தவர் சிவநேசன் – கூட்டத்தில் ஆட்சேபனை கேட்கப்பட்டது – எதுவும் இல்லை.

                                                தினேசன் முதலில் ஏற்றுக்கொள்வதற்கு மறுத்தார்.

            உபபொருளாளர்மோகனதாஸ் செல்வராஜா. முன்மொழிந்தவர் சிவானந்தம் – கூட்டத்தில் ஆட்சேபனை கேட்கப்பட்டது – எதுவும் இல்லை

            உபசெயலாளர்: சஜீதன் சச்சிதானந்தம்.  முன்மொழிந்தவர் கோணேஸ் – கூட்டத்தில் ஆட்சேபனை கேட்கப்பட்டது – எதுவும் இல்லை

———————————————————–

மேல் குறிப்பிட்டவை முற்றானவையே . இவற்றுக்கு முன் பல பெயர்களை பலரால் முன்மொழியப்பட்டது, அவர்களால்

ஏற்றுக்கொள்ளாததன் பொருட்டு மாற்றங்கள் செய்யப்பட்டது

———————————————————–

Ø  இடைவேளையும் நிர்வாகக்குழு கூட்டமும்.

நிர்வாகிகளால் ஆலோசிக்கப்பட்டவையும், இணக்கப்பாடுகளும்

பின் அவற்றை அங்கத்தவர் அனைவருடனும் பகிர்ந்துகொள்ளப்பட்டவையும்

1/ இன்று ஒன்றுகூடலுக்கு பாவித்த மண்டபத்தையே இனிவரும் காலங்களிலும் வாடகைக்கு எடுப்பது. 

2/ வருடத்தில் இருமுறை ஒன்றுகூடல்கள் நடாத்தப்படும். வருடத்தில் சித்திரைமாதமும் தீபாவளிமாதத்திலும் (6 மாத இடைவெளிகளில்)

            3/ இன்று வந்தவர்களிடம் இன்றைய ஒன்றுகூடல் செலவுகளுக்காக நிதி சேகரித்தல்.

4/ சேகரித்த நிதியிலும் Bingo வருமானத்திலும்  செலவுகள் கழிய மிகுதியானவையை ஊர்களிலுள்ள சகல பாலர் பாடசாலைப் 

   பிள்ளைகளுக்கு படிப்பதற்கு தேவையான பொருளுதவிகள் புரிதல்.

+ மண்டபத்தில் சேகரித்த மொத்த தொகை €426

+ Bingo வருமானம்  €76

– மண்டப வாடகை €300.

+ இருப்பு €202.  இருப்பு சரியான கணக்கு வழக்கு பொருளாளலரால்  பின்னர் உங்களுக்கு மின்னஞ்சல்

மூலம் அறிவிக்கப்படும்.

5/ மீண்டும் நிர்வாகம் இரண்டு மாதங்களுக்கு பின் ஒன்றுகூடி மேல்குறிப்பிட்ட திட்டத்தை பற்றி ஆராயும்.

    ஒன்றுகூடும் இடம்: ஆலோசகர் வீடு.

6/ இன்று நடைபெற்ற ஒன்றுகூடலில் சாப்பாடு பலகார உதவி செய்தவர்கள் இன்று சேர்ந்த நிதியிலிருந்து தங்கள் செலவை

    எதிர்பார்க்கின்றார்களா என்று கேட்கப்பட்டது. அனைவரும் தாம் அன்பளிப்பாக கொடுத்துதவியதாக ஏகமனதோடு ஏற்றுக்கொண்டனர்.

 

Ø  எம்மவர் ஒன்றியத்தின் பெயரும் சின்னமும் தெரிவு.

ü  முன்மொழியப்பட்ட பெயர்களும் முன்மொழிந்தவர்களும்

அ) எம்மவர் பண்பு கழகம் – Geயாழினி (Germany)  Ger GGG

ஆ) நெதர்லாந்து எம்மவர் ஒன்றியம் – திருமணி சிவநேசன்

இ) சுழிபுரம் தமிழர் ஒன்றியம் – திரவியம் அக்கா

ஈ) கதிரவன் கழகம்  – சிவசுப்ரமணியம்

உ)  நெதர்லாந்து பண்-முக ஒன்றியம் – ரூபன்

கூடிய ஆதரவு ´நெதர்லாந்து பண்-முக ஒன்றியம்´ இற்கு கிடைத்தது.

இதற்க்கு சச்சி அவர்கள் ´பல முகங்களை கொண்ட பணிப்புலத்தாரின் ஒற்றுமையை பிரதிபலிப்பதாக´ விளக்கினார். இந்த விளக்கம் பலரால் வரவேற்க்கபட்டது. பின்னர் இந்த பெயரை பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ü  முன்மொழியப்பட்ட சின்னங்களும் முன்மொழிந்தவர்களும் அதன் வாக்கும்

1/  சங்கு – ரூபன் – எம்மவரின் பிரபல்ய+பண்டைய அடையாளம்.  

2/  புறா – திருமணி  சிவநேசன் – அமைதியின் அடையாளம்

3/ சாவல் – சச்சி – எம்மை காலையில் நாளாந்தம் நித்திரையால் எழுப்புவது.

சாவலுக்கு கை தட்டியபடி  தம் கைகளை  உயர்த்தியவர்களின் தொகை எண்ணில் அடங்காதவை

Ø  இளையோருக்கான எம் ஊர் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியும், சிறியவர் பெரியோர்களில் அவரவர்

 அபிப்பிராய உரைகளும்.

டினேசும் யாழினியும் இணைந்தது தாம் எம் ஊர்களையும் எம் ஊர் இளைஞர்களையும் பற்றிய தம் கண்ணோட்டத்தை வலு நவீன முறையில் எம்மோடு பகிர்ந்துகொண்டார்கள்.

Ø  பரிசில்கள் வழங்கும் வைபவம்.

இந்த அறிக்கையில் 3 வதாக இடம்பெறும் விளையாட்டுக்களில் வெற்றிபெற்றவர்களுக்கும்  கலந்து கொண்ட சகல சிறுவர்களுக்கும் எமது எதிர்கால ஊர் ஆலோசகர் சிவானந்தம் அவர்கள் பரிசில்களை வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார். 

நிகழ்ச்சி சந்தோசமாகவும் வெற்றிகரமாகவும்  நிறைவு பெற்று அனைவரும் விடைபெற்றனர்.

8 Responses to “ஒன்றுகூடல் அறிக்கை. நெதர்லாந்து பண்-முக ஒன்றியம்‏(திருத்தப்பட்டுள்ளது)”

 • kalaiuran:

  நெதர்லாந்து பண்முக ஒன்றியத்திற்கும் அதனை நிர்வகிக்கும் பொறுப்புக்களைச் சுமந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது இனிமையான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.இத்துடன் எங்கட கலை கலாச்சாரம் பேணப்படுவது சந்தோசம்.முக்கியமாக நிர்வகிக்கும் பொறுப்புக்களைச் சுமந்த அனைத்து நிர்வாகிகளும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொண்டால் இந்த அமைப்பானது எம் ஊர் மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகளும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது

 • சச்சி:

  கள்ளம் கபடம் அற்ற இவ் உள்ளங்களின் மனதார வாள்த்தொன்றே போதும் நாம் மென்மேலும் மேலோங்கி எம் சமூகப்பணி தொடர.

 • siva germany:

  அருமையிலும் அருமை! எப்போதும் நல்லதையே சிந்திப்போம். எல்லாவற்றையும் விபரமாக எழுதியிருந்தீர்கள் அருமை! இவ் ஒன்றுகூடல் அடுத்த முறை பன்மடங்கு வெற்றிபெற வேண்டும். இதுதான் எனது அவா!

 • எங்கட கலாச்சாரம் பேணப்படுவது சந்தோசம் வாழ்க வளமுடன்

 • Ratnarajah:

  ஒன்றுகூடல் சிறப்பாக நடத்தியமைக்கு வாழ்த்துக்கள். புதிய நிர்வாகிகளுக்கும்வாழ்த்துக்கள்.தொடர்ந்தும் தொய்வின்றி
  தொடரட்டும் உங்கள் பணிகள், ஒன்றுகூடல்கள்

 • புகுமனை புகுந்துள்ள நெதர்லாந்து பண்முக ஒன்றியத்திற்கும் அதனை நிர்வகிக்கும் பொறுப்புக்களைச் சுமந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் கனடா பண்கலை பண்பாட்டுக்கழகம் தங்கள் இனிமையான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றன.
  பண்கலை பண்பாட்டுக்கழக நிர்வாகிகள் கனடா.

 • T.BALA. pannipulam:

  கொலண்ட் வாழ் எம் உறவுகளின் ஒன்றுகூடலின் வெளிப்படைத்தன்மை பாராட்டப்படவேண்டியது.இதுவேதொடர்ந்தும் கடைப்பிடிக்கவேண்டிய அவசியம்.ஆலோசகர் ஒரு நல்ல தெரிவு.இளைஞ்ஞர்களை உட்கொணர்வு எதிர்கால நல்லபாதையை நோக்கி செல்லும் என்ற நம்பிக்கையை தரும் செயற்த்திட்டமாகும்.ஒட்டு மொத்தமாய் உங்கள் ஆரம்பம் இதே வேகமும், அதிபுத்திசாலித்தனமான விவேகமும், வெளிப்படைத்தன்மையும் இருந்தால் எமது எண்ணங்களை நிறைவேற்றமுடியும். பணிப்புலம் த.பாலகுமார் டென்மார்க்

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  குமுதினி பாலகுமார் அவர்களால் ‘ செம்பருத்தம் பூ’ எம் ஒன்றியத்தின் சின்னமாக முன்மொழிந்ததை நான் இந்த அறிக்கையில் 4 வதாக குறிப்பிடுவதற்கு மறந்துவிட்டேன் – என்னை மன்னிக்கவும்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து