உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

நீர்வேலியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில் மூன்று வீடுகளில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு வீட்டில் 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணமும் மற்றொரு வீட்டில் 2 பவுண் எடையுடைய சங்கிலிகள் இரண்டும் கொள்ளையிடப்பட்டதுடன் மூன்றாவது வீட்டில் துவிச்சக்கர வண்டி திருடப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகமூடி அணிந்து வாள்களுடன் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பலே ஊரடங்கு வேளையில் இந்த துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.அத்துடன் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த கும்பல் அங்குள்ளவர்களை தாக்கியும் அச்சுறுத்தியும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து