உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இஞ்சி குழம்பு

தேவையானபொருள்கள்

துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி – சிறிதளவு
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
வெங்கயம்-3

பூண்டு – 20 பல்
இஞ்சி – 25 கிராம்
வறுத்த வெந்தயம் – 1 ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
சாம்பார் பொடி – 2 ஸ்பூன்
புளி – சிறிதளவு

முதலில் தோல் நீக்கிய இஞ்சி, வெங்கயம் , பூண்டு ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணைய் விட்டு கடலை பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, துவரம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் மஞ்சள் பொடி சேர்க்கவும். இத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, சாம்பார் பொடி, பெருங்காய பொடி, புளி கரைத்த தண்ணீர், வறுத்த வெந்தயப்பொடியை சேர்க்கவும். நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். மருத்துவ குணமுடைய இஞ்சி குழம்பு ரெடி.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து