உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மாணவர் அணி 2011. >>>>>>பண்கலை பண்பாட்டுக் கழகத்தினரால் நடாத்தப்பட்ட Spelling Bee 2011 April மாதம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை Scarborugh Civic Center ல் வெகு சிறப்பாக நடந்தேறியுள்ளது.  ( Spelling Bee போட்டி முடிவுகள் பின்னர் அறியத்தரப்படும்). இந் நிகழ்விற்கு 100 ற்கும் மேற்ப்பட்ட அங்கத்தினர்கள் சமூகமளித்திருந்தனர். இப் போட்டி நிகழ்வுகளினிடையே அங்கு சமூகமளித்திருந்த பண்கலை பண்பாட்டுக் கழகத்தின் தற்போதைய நிர்வாக அங்கத்தினர்கள் அனைவரினதும் ஏகோபித்த தீர்மானத்திற்கு அமைவாக எமது கழகத்தில் ஒரு மாணவர் அணி” அமைத்துக்கொள்வதெனத்  தீர்மானிக்கப்பட்டது. எமது மாணவர்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் மற்றும் திட்டமிடல் திறன் போன்றவற்றை வளர்க்கும் முகமாகவும்  இம் முயற்ச்சி எம்மால் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் எமது கழகத்தைக் கனேடிய நீரோட்டத்திற்குள் கொண்டுசெல்வதற்கான வழிவகைகளை இம்மாணவர் அணியினூடாக எடுத்துச் செல்லலாம் என்பதில் நாம் அனைவரும் நம்பிக்கைகொள்வோமாக.

         இத் தீர்மானத்திற்கமைய பின்வரும் 11 உறுப்பினர்களைக் கொண்ட புதிய மாணவர் அணி – நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டுளது என்பதை சகலருக்கும் பண்கலை பண்பாட்டுக்கழகம் அறியத்தருகின்றது. இவர்களுக்கான பொறுப்புக்கள் மற்றும் கடைமைகள் சம்பந்தமான ஆரம்ப விளக்கம் கழகச் செயலாளரினால் விளக்கப்பட்டிருந்தது.

1. தலைவர்- செல்வி. ரிசாயினி.மனுவேந்தன்.

2. உப தலைவர்- செல்வி. மஞ்சரி.பராந்தகன்

3. செயலாளர்- செல்வன்.சிந்துசன்.சண்முகம்.

4. உப செயலாளர்- செல்வி.தர்சனா.குகன்.

5. பொருளாளர். செல்வி.டானியா.சிவகுமார்.

நிர்வாக சபை உறுப்பினர்கள்.
6. செல்வன்.ரிசான்.நடேசன்
7.செல்வி.இரம்மியா.இழங்கண்ணன்.
8. செல்வி.நிலானி.கோணேஸ்வரன்.
9. செல்வன்.திவாகரன்.குகன்.
10. செல்வி.பவித்திரா.உதயகுமார்.

11. செல்வி.லாவண்யா.வைகுந்தவாசன்.

வாழ்த்துக்கள்.

தகவல்.
தலைவர், செயலாளர், பொருளாளர்.
பண்கலை பண்பாட்டுக்கழகம்-கனடா
APRIL 22 2011.

14 Responses to “பண்-கலை பண்பாட்டுக் கழகம்”

 • T.BALA. pannipulam:

  ஏகன் அவர்களே உங்களது முயற்ச்சி வெற்றியே.சிறந்த திட்டமிடல்,தூரநோக்கம், ஊரில் தேவையற்ற பாடசாலைகள்,முன்பள்ளிகள்,சனசமூகநிலையங்கள் அனைத்தையும் அகற்றுவதாய் உறுதியளித்துள்ளீர்கள்.இதோடு ஒரு வேண்டுகோள் காவியில் வேட்டி,சால்வை,சாறி,சுரிதார் இலவசமாக வளங்கினால் அருமை.எனது ஆதரவையும் அதோடு கனடாவுக்கு வந்து பிர்சாரம் செய்யவும் தயார் உம் கடன் பணிசெய்து அடைப்பதே. பண் த.பாலா

 • வணக்கம்

  அடுத்து வரும் தேர்திலில் வேட்பாளராக நிற்கிறேன் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் அமைச்சராகும் வாய்ப்பு இருப்பதால் எனது வேலைத்திட்டங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..
  எமது ஊரில் தெருவுக்கொரு கோவில் கட்டுவதுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு கோயில் சிலை இலவசமாக வழங்கத் தீர்மானித்துள்ளேன். அத்துடன் ஆலய நிர்வாகப் பொறுப்புகள் கோயில் பூசாரிகளிடமே ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளேன்.
  யாராவது கோயில் பிராமணராக விரும்பினால் உங்களுக்காக சமஸ்கிருதப் பள்ளிகள் தொடங்குவதாகவும் தீர்மானித்துள்ளேன்.
  சனசமூக நிலையம் மன்றம் போன்ற நிறுவனங்கள் உங்களுக்கு வீண் தொல்லைகள் தருமாயின் அவற்றை மூடுவதற்கும் முயர்ச்சி செய்கின்றேன். இன்னும் நல்ல பல சேவைகளைச் செய்யத் தீர்மானித்துள்ளேன். உங்கள் ஆதரவைப் பொறுத்து பல அன்னதான மடமும் சிறுவர் பாடசாலைகளை மூடிவிட்டு ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளேன்.
  உங்கள் வாக்குகளை எனக்கு அளியுங்கள். எனது சின்னம் ‘தேர்’

  தமிழேரன்

 • சச்சி:

  தெரிவு செய்யப்பட்டவர்கள் எல்லோரும் இளம் மாணவர்கள் இவர்களுக்கு உதவியாக ஒரு ஆலோசகர் நியமிக்கப்பட்டிருந்தால் மிகவும் உதவியாக இருந்திருக்கும் என்பது அடியேனின் சிறு அபிப்பிராயம்.
  இப்படிக்கு;நெ,ப,மு,ஒ.தலைவர் ;ச.சச்சிதானந்தன்.

 • சச்சி:

  சபாஸ் எதிர்கால சந்ததியினரை தட்டிக்கொடுக்கும் முயற்சி வாழ்த்துக்கள்.
  நெ,ப,மு,ஒ. தலைவர், ச.சச்சிதானந்தன்.

 • kalaiuran:

  உங்கள் ஒவ்வெரரு செயல்பாடுகளும் காலத்தால் அழிக்கப்படாதவை.கனடா நிர்வாக (சபை) உறுப்பினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 • பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே:

  வாழ்த்துக்கள்!
  உங்கள் இச்செயல் எங்கள் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக அமையும்படி உங்கள் எதிர்கால செயல்பாடுகளும் அமையவேண்டும் என வாழ்த்துகின்றோம்.
  நன்றி!
  பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே.

 • T.BALA. pannipulam:

  பண்கலைக்கூட முயற்ச்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.எதிலும் ஒரு சுவார்ஸ்யம் தேவை அதுவே இணையத்தில் சில நண்பர்கள் எழுதுகிறார்கள்.இதுக்கெல்லாம் கோபப்படலாமா? பண் த.பாலா

 • பண்கலை பண்பாட்டுக்கழகத்தினால் நடாத்தி முடிக்கப்பட்ட ஆங்கில சொற்களுக்கான எழுத்துக்கூட்டல் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.
  பண்கலை பண்பாட்டுக்கழகத்தின் மாணவர் அமைப்பின் நிர்வாகத்தினர்களுக்கு எங்களின் வாழ்த்துக்களும் வரவேற்புகளும் உருத்தாகுக.
  பண்கலை பண்பாட்டுக்கழகத்தின் அனைத்து செய்திகளையும் மக்கள் மத்தியில் இலகுவான முறையில் எடுத்துச் செல்கின்ற எங்கள் சகோதர இனையங்களான பணிப்புலம்.கொம்,பணிப்புலம்.நெற்,கலட்டி.கொம் ஆகியவற்றின் அதிபர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் பண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா தங்களின் இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றன.
  இப்போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட அனைவருக்கும் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்த பெற்றோர்களுக்கும் அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் மற்றும் பல வகைகளில் இவ் போட்டி நிகழ்ச்சிக்கு உதவிகள் புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றிகள்.
  தலைவர் பண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா.

  • admin:

   உங்கள் நன்றியை நட்போடு நாம் ஏற்றுக் கொள்கின்றோம். மேலும் எமது இணையத்தை நீங்கள் நிர்வாகம் என்று அழைத்தாலே போதுமானது. எங்கள் இணையத்தில் அதிபர் யாரும் கிடையாது. அப்படி இருக்கிறார்கள் என்று யாரவது உங்களுக்கு கூறியிருந்தால் அது உண்மையல்ல…

   இணைய நிர்வாகம்.
   பனிப்புலம்.நெற்

 • நெதர்லாந்துக்கு வெளியிலிருந்து சுதர்ஷன்:

  நல்ல யோசனை எதிர்கால வளர்ச்சி நோக்கி இளைஞர்களை/மாணவர்களை கழகத்திற்குள் ஈடுபடுத்துவதும், கழகத்தை கனேடிய நீரோட்டத்திற்குள் கொண்டுசெல்வதற்கான வழிமுறைகளை இம்மாணவர் அணியினூடாக எடுத்துச் செல்லலாம் என்ற யோசனை மனம்கவரச்செயகிறது.
  இதே வழிமுறைகளை வேறு நாடுகளில் அமை(யயி/ந்தி)ருக்கும் கழகங்களும் பின்பற்றினால் அக்கழகங்களின் எதிர்காலங்களின் நீளம் மேலும் பன்மடங்கு கூடியதாக அமையும் என்பது என்கருத்து.
  Canada நிர்வாக (சபை) உறுப்பினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 • T.BALA. pannipulam:

  என்ன அரசியலில் குதிக்கும் எண்ணமோ பண் பாலா

  • நல்ல விடயத்தை கை தட்டி வரவேற்கவேண்டும். இல்லையேல் மௌனமாக இருப்பது நன்று.
   மதிப்பிற்குரிய தம்பி சுதர்சனின் கருத்துகளுக்கும் ,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
   குருவி

   • மாவலன்:

    குழப்புவதுதான் எப்பவும் இலகுவான காரியம். நல்லது செய்வது உண்மையில் சரியான கஸ்டம். எப்பவும் அரசியல்வாதிகள் போன்று பாசாங்கு பண்ணுபவர்கள் இப்படித்தான் செய்கின்றார்கள். அவர்களை மக்கள் இனங் கண்டு கொள்வார்கள்.

  • தேவை ஏற்படின் கனடா அரசியல் நீரோட்டத்திலும் நீந்துவதற்கு எமது கழக நிர்வாகிகளும் எங்களின் மாணவர் அமைப்பும் தயார் நிலையில்தான் உள்ளது.மக்கள் பலமே எங்களின் மாபெரும் சக்தியாகும்.
   கெங்கா கனடா

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து