உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

நெதர்லாந்து பண்-முக ஒன்றிய  நிர்வாகக்குழுத்தலைவர்  நன்றி பாராட்டுதல். 

16.04.2011 அன்று நெதர்லாந்து பண்-முக ஒன்றியம் நடாத்திய எமது ஒன்றுகூடல் நிகழ்வுகளை நேரஞ்சலாகவும், ஒளிப்பதிவாகவும் உலகெங்கும் பரந்துவாழ்ந்து பார்த்து ரசித்த எம்மவர்களுக்கும், பார்த்து ரசித்து எம்மை பாராட்டி பரவசம் அடைய வைத்தவர்களுக்கும், பரந்துவாழ்ந்தாலும் இந்நெதர்லாந்தில் பறந்துவந்து எம் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு களிப்புற்றவர்களுக்கும், கலந்துகொள்ளமுடியாமல் போனவர்களுக்கும், கல கலவென சிரித்து கை தட்டி கலை நிகழ்ச்சிகளுக்கு கைதூக்கிவிட்டவர்களுக்கும், கண்டபடி ஓடித்திரிந்தாலும் கடவுளுக்குசமமான கடைக்குட்டிகளுக்கும், காசுகொடுத்து பங்களிப்பு செய்த கனவான்களுக்கும். இந்நிகழ்ச்சிகளை கடல்கடந்து எம்மவர்களின் கண்களுக்கு விருந்தாக்கிய இவ்விணைய  நிர்வாகிகளுக்கும், முக்கியமாக இவ்விணையத்தின் மூலம் எம்மை பாராட்டுமழையில் நனையவைத்த பாசமிகு உறவுகளுக்கும் நெதர்லாந்து பண்-முக ஒன்றியத்தின் நிர்வாகக்குழுவினரின் பல்லாயிரம் கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

 இப்படிக்கு.  சச்சிதானந்தன், தலைவர்   நெதர்லாந்து  பண்-முக ஒன்றியம்

10 Responses to “நன்றி பாராட்டுதல்.”

 • sivananthan holland:

  சேவல் கலையில் கூவும் பொழுதும் . சூரியன் கலையில் உதிர்க்கும் பொழுதும்.
  கலையில் கிழக்கு பக்கத்தை நோக்கும் பொழுதும். சூரியன் கதிர் விட்டு மலர்ந்து இருக்கும் பொழுதும்.விவசாயிகள் தங்கள் மாடு வண்டியுடன் வயலுக்கு செல்லும் பொழுதும். மாடு வண்டியின் சலங்கை ஒலி கேட்கும் பொழுது மனதில் மட்டுமல்ல.மக்களுக்கு மனதில் புது உலகத்தை பார்ப்பது போல் உள்ளத்தில் ஒரு சந்தோசம். ஆகவே நெதர்லாந்து பன்முக ஒன்றியத்தின் ஆலோசகர் எனது விருப்பத்துடன்.சேவலையும் சூரியனையும் தெரிவு செய்கிறேன்.

  நெதர்லாந்து பன்முக ஒன்றிய அலோசர்
  அப்புத்துரை சிவானந்தன்

 • சேவல் நல்லாக் கொழுத்துத்தான் நிற்கின்றது. ஆனால் கவனம் சேவலுக்கு நோய்வராமல் பாதுகாக்க வேண்டும்.கண்ட நிண்ட கோழியளோட பழக விடவேண்டாம்.பின்பு பின்னால சிக்கல்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   hahaha சேவலை அடுத்த தீபாவளி ஒன்றுகூடல் வரையும் நாங்கள் diet பண்ண செய்திருக்கிறோம். கடைத்தீன் போடுவதை நிப்பாட்டி இப்ப நாங்கள் சாப்பிடும் சோறும் சொதியும் மட்டும் தான், அதுவும் மிஞ்சினால்.
   மேய விடுவதும் பசுக்களோடுதான் மற்றைய கோழிகளோடு இல்லை Avian Flu வருத்தம் பிரச்சனையால 🙂 🙂 🙂

 • அழகான சேவல்,நல்ல சின்னம்.
  வாழ்த்துக்கள்
  உங்களின் வளர்ச்சி இன்னும் வீறு நடை போடட்டும்
  சீலன்
  சீலன் டிஜிட்டல் போடோஸ் Swiss

 • T.BALA. pannipulam:

  உங்களது வாழ்த்துக்கள் இணையத்துக்கு ஒரு ஊக்குவிப்பாகும்.இணையம் எங்களது என்று நினைத்து செயற்ப்படவேண்டும்.ஏன் என்றால் இணையம் தொடங்கப்பட்டதே ஊரையும் புலத்தையும் இணைக்கவே எமது கனவு இவ்வளவு விரைவில் முன்னோக்கி செல்வது உங்களுக்கே பெருமை. பண் பாலா

 • சேவல் சின்னம் பிரமாதம் வாழ்த்துக்கள்

 • kalaiuran:

  நீங்கள் தெரிவு செய்த சேவல் சின்னம் மிகவும் நன்றாக இருக்கிறது.அதன் பின்னால் உள்ள காலைக் கதிரவன் சின்னமும் அழகாகஇருக்கிறது.எதிர்கால செயல்பாடுகளும் இதேபோன்று அழகாக இருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 • T.BALA. pannipulam:

  அழகான சேவல்,நல்ல சின்னம்,சிறந்த தெரிவு.எப்படி என்றாலும் பார்க்கும்போது பிடித்து வயிரவர் வேள்வியில பண் பாலா

  • ஒல்லாந்தன்:

   வேள்வியில் பலி கொடுக்க நினைப்பவர்களை ஏறி மிதிக்கும் வகையை சேர்ந்த சேவல் இது சர்வசாதாரணது இல்லை

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து