உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

தலப்பா கட்டு ஆட்டுஇறைச்சி பிரியாணி

சமைக்க தேவையானவை பொருள்கள்
நெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1/4 கப்,
ஏலக்காய் – 2,
தயிர் – 1 கப்,
எலுமிச்சம் பழம் – 1/2 பதி
கராம்பு – 2,
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி – 2,
கறுவா – சிறிது,
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
சீரக சம்பா அரிசி – 1/2 கிலோ,
மட்டன் – 1/2 கிலோ,
மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி,

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு வெங்காயம், தக்காளியை  நறுக்கவும்.பெரிய பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிகொள்ளவும் .

வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியவுடன் , மட்டன் சேர்த்து வதக்கவும் .நன்கு வதங்கிய பின் மிளகாய்த்தூள், தயிர், எலுமிச்சம் பழ சாறு சேர்த்து, 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.தண்ணீர் கொதிக்கும் போது ஊற வைத்த அரிசியைப் போடவும்.அரிசி பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும்.அரிசி வெந்ததும் நெய், சேர்த்து கிளறி இறக்கவும்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து