உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சைவ (முட்டையில்லாத )ஆம்லெட்

தேவையான பொருட்கள்:
முளைக்கீரை-1/2 கட்டு
ஒரு பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்-4
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
உப்பு-1/2 தேக்கரண்டி
கடலை மா– 5- 7 மேசைக்கரண்டி
பால்-2 தேக்கரண்டி
மிளகாய் தூள்-1/4 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு  பத்திரத்தில் கடலை மா, உப்பு, பால், மஞ்சள்தூள், மிளகாய்தூள், சேர்த்து தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்.வெங்காயம் தோல் உரித்து சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.
முளைக்கீரை  கழுவி நீர் வடித்து சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.

பச்சை மிளகாய், சின்னவெங்காயம், கீரை எல்லாவற்றையும் கரைத்த மாவில் சேர்த்துக்கலக்கவும்.தோசைக்கல்லு சூடனதும் சிறிய அம்லேட்டாக ஒரு கரண்டி அளவு மாவெடுத்து வட்டமாக ஊத்தி, ஒரு தேக்கரண்டி எண்ணெய் சுற்றிலும் விட்டு.திருப்பி மறுபக்கம் வேக வைத்து எடுக்கவும், சைவ ஆம்லேட் தயார்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து