உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீறாவோடை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று (27) இரவு மீறாவோடை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் 2260 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் மீறாவோடை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்து வாழைச்சேனைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

குறித்த இளைஞர் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து