உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்களை பொலிசா் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் நேற்று மாலை சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்கிடமான முறையில் மூன்று இளைஞர்கள் நடமாடியுள்ளனர்.

இவர்களைப் பொலிஸார் விசாரணை செய்துள்ளனர். விசாரணையின் போது முன்னுக்குப் பின்முரணான தகவல்களைப் பொலிஸாருக்கு வழங்கியுள்ளனர்.இதையடுத்து, அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பரந்தன் பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து