உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வட்டுக்கோட்டைப் பகுதியில் 124 கிலோவிற்கும் அதிகமான கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரதொல வீதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.10 மணியளவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பொலிஸார் சந்தேகத்திற்கிடமான இரு சைக்கிள்களை சோதனைக்குட்படுத்தியுள்ளதுடன், அவை ஒவ்வொன்றினதும் பின்புறத்தில் இரு பொதிகள் காணப்பட்டுள்ளன. அவற்றை சோதனைச் செய்த பொலிஸார் அதிலிருந்து 124 கிலோ 750 கிராம் கேராளா கஞ்சா தொகைளை கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 37 , 40 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து