உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் மாணவியின் சகோதரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கிளிநொச்சி வளாகத்தின் அனைத்துப் பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வளாகத்தில் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்திற்குள் செல்வதற்கும் நேற்று மாலை முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

அத்துடன், கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பரீட்சைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் மாணவியின் சகோதரன் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றிவரும்இராணுவ வீரர் என்பதுடன், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கம்பஹாவில் உள்ள சுகாதாரத் திணைக்களத்திலிருந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதாரத் திணைக்களத்துக்கு உத்தியோக பூர்வமாக தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்நிலையிலேயே, கிளிநொச்சி வளாகத்தின் அனைத்துப் பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து