உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

உருளைக்கிழங்கு,பட்டாணி சாதம்

தேவையான பொருட்கள் :

உதிரியாக வடித்த சாதம் – ஒரு கப்
உருளைக்கிழங்கு – 2
பச்சைப் பட்டாணி – கால் கப்
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.உருளைக்கிழங்கை வேக வைத்துதோல் உரித்து  நறுக்கி கொள்ளவும்.

பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

வெங்காயம், ப.மிளகாயை நறுக்கி கொள்ளவும்.

தாச்சியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.வெங்காயம்  வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து இதனுடன் உப்பு, மசித்த உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.பிறகு அதில் உதிரியாக வடித்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து