உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை சந்தேகத்திற்கு இடமான நிலையில் பெண்ணொருவரின் சடலம் காணப்பட்டதைத் தொடர்ந்து மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த மன்னார் பொலிஸார், சடலத்தை பார்வையிட்ட நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றனர்.

இதன் பின்னர் மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று சடலத்தை கண்டெடுத்தனர்.

இதன்போது பெண்ணின் உடலில் பலத்த காயங்கள் காணப்படதுடன், இழுத்து செல்லப்பட்ட அடையாளங்கள் காணப்பட்டதாக விசேட தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த இடத்தில் இருந்து ஆண் ஒருவரின் பாதணி, கையுரை உட்பட சில தடையப் பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்கப்பட்ட சடலம் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து