உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

தேவையான பொருட்கள் :

நெத்திலி மீன்தொக்கு

நெத்திலி மீன் – கால் கிலோசாம்பார் வெங்காயம் – 10
தக்காளி – 4
மிளகாய் – 4
மிளகாய் தூள் – கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
கரம் மசாலா தூள் – கால் டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு
சீரகம், வெந்தயம் – கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கு
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
தேங்காய் பால் – கால் கப்

நெத்திலி மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.புளியை நீரில் கரைத்துக்கொள்ள வேண்டும்.கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தாச்சியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.பிறகு வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.

 

வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.அடுத்து அதில் மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் உப்பு தூவி கிளறவும்.பின்னர் கரைத்து வைத்த புளி கரைசலை ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.கொதிக்க தொடங்கியதும் நெத்திலி மீன், தேங்காய் பால் சேர்க்கவும்.கெட்டியாகி தொக்கு பதத்துக்கு வந்ததும் இறக்கி பரிமாறலாம்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து