உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

காளான்  பிரியாணி

தேவையான பொருட்கள்

காளான் – 1/2 கிலோ

பாசுமதி அரிசி – 2 கப்

வெங்காயம் – 1

தக்காளி – 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

கொத்தமல்லி – 1/4 கப்

புதினா – 1/4 கப்

பச்சை மிளகாய் – 3

எண்ணெய் – 3 டேபிள்

பச்சை மிளகாய் – 3
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் – 1/2 கப்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லி தூள் – 2 டீஸ்பூன்
சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
ஏலக்காய் – 3 இலவங்கம் – 2
கராம்பு – 5
தண்ணீர் – 3 கப்
உப்பு – தேவையான அளவு

முதலில் காளானை  கழுவ வேண்டும். பின் அதனை சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதே சமயம், அரிசியை நீரில் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, கராம்பு, ஏலக்காய், இலவங்கம் ஆகியவற்றை போட்டு, தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து, வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளியானது நன்கு வதக்கியதும், காளானை போட்டு பிரட்டி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சோம்பு தூள், தயிர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து,  கொதிக்க வைக்க வேண்டும்.
அதே சமயம், சட்டியை  மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் அரிசியைக் கழுவி போட்டு, அந்த கொதிக்க வைத்த மசாலாவை ஊற்றி, 3 கப் தண்ணீரை ஊற்றி, சட்டியை மூடி  வேகவிட்டு இறக்கவும். காளான் பிரியாணி ரெடி!

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து