உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சாம்சங்கை தனது உத்திகளால் உலக நிறுவனமாக்கிய அதன் தலைவர் லீ குன் ஹீ தனது 78-வது வயதில் காலமானார்.உலக அளவில்  மின்னணு சாதன  பொருட்கள் தயாரிப்பில்  முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்று சாம்சங்.தென்கொரியாவை சேர்ந்த இந்த நிறுவனத்தின் தலைவர்  ஆக இருந்த லீ குன் ஹீ உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 78.

தென்கொரிய நிறுவனத்தை உலக அளவில் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றாக கொண்டு சேர்த்த லீ குன் ஹீ, கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு படுத்த படுக்கையாகவே இருந்த அவர் இன்று உயிரிழந்தார்.

உலகின் 12-வது மிகப்பெரிய பொருளாதார நாடான தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சாம்சங் நிறுவனத்தின் துணை தலைவர் லீ ஜே யோங், கடந்த 2014-ம் ஆண்டு முதல் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார்.தென்கொரியா பங்குசந்தையின் சாம்சங் மூலதனம் 10 சதவீதம் ஆகும்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து