உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம் `காதலிக்க யாருமில்லை’. திகில் கலந்த பேண்டஸி காமெடி படமாக உருவாகும் இதில், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்கிறார். மேலும் யோகிபாபு, குரு சோமசுந்தரம், ஷாரா, ஆனந்தராஜ், கவுசல்யா, செந்தில், ராமர்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வெங்கடேஷ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். சிவா படத்தொகுப்பையும், கமலநாதன் கலை பணிகளையும், டான் அசோக் சண்டைக் காட்சிகளையும் வடிவமைக்கின்றனர்.

ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜன் இந்த படத்தை தயாரிக்கிறார். குறும்படம் இயக்கி பிரபலமான கமல் பிரகாஷ், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

இப்படத்தை கே.ஜானகி ராமன் இயக்கி உள்ளார். தரன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
 படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: சென்னையில் அடையாறு, ஆழ்வார்பேட்டை, கே.கே.நகர், வியாசர்பாடி என நான்கு வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் ஒருவரையொருவர் அறியாமலேயே ஒருவர் வாழ்க்கையில் மற்றவர்கள் சம்பந்தப்படுகிறார்.
அது தெரிந்த பிறகு அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பது கதை. அவர்கள் யார் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பது திரைக்கதையின் போக்காக இருக்கும் என கூறியுள்ளார்.

மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ’சார்லி’. துல்கர் சல்மான் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பார்வதியும் நடித்திருந்தனர்.

இந்த படத்தை மார்ட்டின் பர்கத் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் பல்வேறு விருதுகளையும் வாங்கியது. இந்த படம் தமிழில் ‘மாறா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் துல்கர் சல்மான் வேடத்தில் மாதவனும், பார்வதி வேடத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே விக்ரம்-வேதா படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நெடுஞ்சாலை படத்தில் நடித்த ஷிவதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் டிசம்பர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து