உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

உலகப்பந்தில்  ஒரு நாட்டில் அங்கீகாரம் பெற்ற   மொழி ஒன்றின் பெயரை பின்பக்கத்திலிருந்து எழுதினாலோ முன்பக்கத்திலிருந்து எழுதினாலோ இது சரியாக வரும். இந்த மொழியின் பெயர் என்ன ? எந்த நாட்டு மக்களால் இது  பேசப்படுகிறது ?  இரண்டு பதில்களையும் கண்டுபிடிக்கும் முதல் வாசகர் €50 வை சுதர்சனிடம் இருந்து வெல்லுவார்.
விதிமுறைகள்:

1/ உலகத்தில் எந்த மூலையிலிருந்தும்  இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். வயது எல்லைகள் இல்லை.

 

2/ புனைப்பெயரிலும் பதில்களளிக்கலாம். சொந்தப்பெயர்கள் வரவேற்க்கப்படும்.

 

3/ பதில் அளிக்க வேண்டிய காலக்கெடு எதிர்வரும் ஞாயிறு பணிப்புல இரவுநேரம் 00:00 வரை. இதன்பின் வரும் (சரியான) பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

 

4/ குறிப்பிட்ட தொகை அந்த முதல் இரண்டுபதில்களையும் ஒரேசமயத்தில் கொண்டு  வெல்லும் வாசகரின் சார்பில் ஊரிலுள்ள பாலர்பாடசாலை பிள்ளைகளின் படிப்பிற்கு  தேவையான பொருளுதவிகள் செய்வதற்கு நெதர்லாந்து பண்-முக ஒன்றியம் ஊடாக அனுப்பி வைக்கப்படும்.

 

5/ விரண்டாவாத கேள்விகளுக்கு பதிலளிக்கப்படமாட்டாது.

மேல் தரப்பட்ட தகவலிற்கு புறம்பாக எதுவும் மீறி தரப்படமாட்டாது.

27 Responses to “இந்த மொழியின் பெயர் என்ன ?”

 • சச்சி:

  அட கடவிளே இது எங்கட அயல் நாட்டு மாநில மொழி இதைப்பற்றி யோசிக்காமல் விட்டுவிட்டேனே இதுக்குத்தான் சொல்லுறது எடுத்த உடன
  மேல அண்ணாந்து பாக்காமல் அக்கம் பக்கத்தையும் சுத்திப்பாக்க வேணும் என்று.
  அச்சன் சுதர்சன் நிங்களுக்கு எந்தா ஒரு வல்லிய மூளையாக்கும்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   Malayalam என்பதை நான் 1988 ம் ஆண்டு மறுமலர்ச்சி மன்ற வாசிகசாலையில் எங்கேயோ ஒரு செய்தித்தாளில் வந்ததை வாசித்து அறிந்துகொண்டேன்.
   நீங்கள் போட்டியறிவித்து முதல் நாளே Ewe என்ற பதிலை தந்து என்னை திசை தெறிக்க, பிரமிக்க வைத்து விட்டீர்கள்.
   இருந்தும் Ewe , Nauruan என்ற கண்டங்கள் தாண்டிய இரண்டு அறியா விடயங்களை அறிந்தது நல்ல விடயமே.

 • sutharsan:

  MALAYALAM

  • sutharsan:

   MALAYALAM
   இந்தியாவில் கேரளாவின் அங்கிகரிக்கப்பட்ட மொழி

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   ஊழல் ஊழல் ஊழல், [நெதர்லாந்தில்] ஊழல்.
   யாரோ என்னிடம் காலக்கெடு முடிந்தவுடன் பதிலை அறிந்தபின் சொந்தப்பெயரிலும் இல்லை, புனைப்பெயரிலும் இல்லை என்பெயரிலேயே நான் முதல் தேடிய பதிலை அறிவித்திருக்கிறார்.
   இதன் வெற்றிய அளாப்பே!!!

   கும்முடிப்பூண்டி குப்புசாமி அவர்களுக்கே அமோக வெற்றியே.
   Admin இதன் பதில்களை மேல் அறிவிப்பார் அறிந்துகொள்ளவும்.

 • T.SANKAR:

  இதற்கான பதில் சொல்லுவதுக்கு அறிவாளிகள் இல்லையோ?????????அல்லது இதன் விளப்பரம் உங்களை கவரவில்லையோ

 • உங்களின் பரிசுத்தொகை மிகக் குறைவாக உள்ளதனால் நான் உங்களின் போட்டி நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவில்லை.நான் எப்போதும் 1000 டொலருக்கு மேல் பரிசுத்தொகையிருந்தால் மாத்திரமே பங்கு கொள்வேன்.இதை நாங்கள் சிறுவயதிலிருந்து கடைப்பிடித்துக் கொண்டு வருகின்றோம்.மன்னிக்கவும்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   hahaha

   ஒரு கிழமைக்குள் 300 இற்கு மேற்பட்ட வாசகர்களால் இந்தப்போட்டியை பார்க்கப்பட்டுள்ளது நான் எதிர்பார்த்து இருக்காதது. வரவேற்க கூடிய விடயம் இது.

   எதிர்கால போட்டிகளில் நீங்கள் நகையாக கூறிய தொகைகூட புலம்பெயர்ந்த எம்மூர் தொழிலதிபர்கள் உபயகாரர்களாக கொடுத்து உதவவும் கூடும்.

   • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    நகையாக = ´நகைச்சுவையாக´ என வாசிக்கவும். பிழையாக நகை, சங்கிலி மோதிரம் எண்டில்லாமல்…..

 • கும்முடிப்பூண்டி குப்புசாமி:

  Nauruan என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி தெற்கு பசிபிக்கிலுள்ள நவூருவில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஏழாயிரம் மக்கள் பேசுகின்றனர்

  • நெதர்லாந்திலுருந்து சுதர்ஷன்:

   சரியான கெட்டிக்காரன்…கும்முடிப்பூண்டி குப்புசாமிக்கு வாழ்த்துக்கள் வெற்றிக்கு.
   கும்முடிப்பூண்டி குப்புசாமி ஐயா அவர்களே நான் இரண்டாவதாக எதிர்பார்த்த கடினமான பதிலை கூறியிருக்கிறீங்கள். சிறப்பு வாழ்த்துக்கள்.
   மேலதிக விபரத்துக்கு மேலே பார்க்கவும்.
   _
   கும்முடிப்பூண்டி குப்புசாமி (உண்மையாக இந்த பெயரில்தானோ??) பெயரில் மேல் குறிப்பிட்ட தொகையை €50 நெதர்லாந்து பண்-முக ஒன்றியம் ஊடாக அனுப்பிவைத்து, கோடைகால முடிவிற்குள் பாலர்பாடசாலை பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்த புகைப்படங்களை உங்களுக்கு admin ஊடாக அனுப்பி வைக்கிறோம்.
   நன்றி உங்கள் வெற்றிக்கும் – உங்கள் அன்பளிப்புக்கும்!!!!

  • கும்முடிப்பூண்டி குப்புசாமி ஆகிய நான் (சுதர்சன்) அறியத்தருவது என்னவென்றால் இதற்கான பதிலை ஒருவரும் சொல்லாததால் கும்முடிப்பூண்டி குப்புசாமி என்ற புனை பெயரில் வந்த நான் இதன் பதிலையும் கூறி பரிசையும் தட்டி செல்கின்றேன்.
   clap clap clap கெங்கா

  • பலர்மோவில் இருத்து த. சங்கர்:

   வாழ்த்துக்கள் குப்புசாமி பலர்மோவில் இருத்து த. சங்கர்

 • செந்தமிழ் படித்த பண்டிதர் மாருக்கும் இந்த மொழி நன்றாகத்தெரியும்.என்பதை மறக்க வேண்டாம்

 • T.BALA. pannipulam:

  இதை செம்மொழி ஆக்கினால் கழுகன்மாருக்கு விளங்கிவிடும்.பாணமுறை விட ஏலாதெல்லோ.நம்மட மொழி எங்களுக்கு தேவை.தமிழ்அகராதியில் இருந்தே எங்கள் ஊரின் மொழி பிறந்தது என்பது உண்மை.ஒன்று=ஏகன், இதுபோல் பல சொற்க்கள் உண்டு. த.பாலா

 • சச்சி:

  அப்படியா பாலா அண்ணா இது அங்கீகரிக்கப்பட்ட மொழியா? அப்படியானால் இதை செம்மொழியாக அறிவிக்கலாமே.

 • T.BALA. pannipulam:

  மொழியின் பெயர் குவாக்கை.பேசப்படுவர் ஒரு லட்ச்சம் மக்கள்.நாடு இலங்கை இந்தியா.இலங்கையில் அளவெட்டி,பணிப்புலதில் அதிகமாக உபயோகிப்பார்கள்.தற்போது ,ஸ்கன்டினேவியன்,ஜரோப்பா,கனடாபோன்றநாடுகளில் பேசப்படுகிறது.தற்ப்போது இதை பீலவில்ட் ஜேர்மனி.கனடா மார்க்கம்,போன்ற இடங்களில் அதிகமாக பாவனையில் உண்டு.தமிழ் அகராதியில் இருந்தே உருவாக்கம் பெற்றது.காலையடி தெற்க்கு மக்ளே இதில் பாண்டித்தியம் பெற்றமக்களாகும்.வேற்று ஊரவருடன் இருந்து நமது ஊரவர் தனியாக இம்மொழியின் உதவியுடன் பல இரகசியங்களை பேசுவார்கள். மொழியின் சிறப்பு இதுவே. பண் த.பாலா வதியிறது டென்மார்க்கில்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   Yakauq >< Quakay
   தவறு. நல்ல முயற்சி.

 • பலர்மோவில் இருத்து... த .சங்கர்:

  இதற்கான விட கன்பதுக்கு எனக்கு மிகவும் கண்ரமாக உள்ளது என்றாலும் போத்துக்கல் மொழியாக இருக்கும் வாழ்த்துக்கள் போட்டி தொடரட்டும்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   Eseugutrop >< Portuguese
   தவறு. நன்றி உங்கள் முயற்ச்சிக்கு சங்கர் அண்ணை.
   _
   இத்தாலியிலுருந்து எம்மூரவராக குரல்கொடுப்பதை நான் வரவேற்கிறேன், உற்ச்சாகப்படுத்திறேன். இணையம் எங்கள் ஊரவர் அனைவருக்கும் – உங்கள் குரலை கொடுத்தவண்ணமே இருக்கவும். நன்றி.

 • சச்சி:

  போட்டி தொடரட்டும்.

 • சச்சி:

  சுதர்சன் இந்த விதி முறைகளை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நான் இதில் தலையை நுளைத்திருக்கமாட்டேன்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   உங்கள் தலையை நுளைத்ததை நான் ஆரோக்கியமான விடயமாகத்தான் பார்க்கிறேன்.
   இல்லையேல் Evegbe மொழியை Togo , Congo மக்கள் பேசுவதும், அதன் எழுத்துருவம் லத்தீனைக்கொண்டதும் இவ்வளவு தொகை மக்களால் இந்த மொழி பேசப்படுவதும் நான்/நாம் அறியாமல் இருந்திருக்க நேர்ந்திருக்கும்.
   போட்டி தொடர அனுமதித்ததற்கு நன்றி.

 • சச்சி:

  Ewe மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கானா, தோகோ போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று மில்லியனிற்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   நான் அறிந்தவரை இந்த மொழியை ´Evegbe ´ என்று தான் உத்தியோகபூர்வமாக எழுதப்படுவதும் என்று (என் தகவல் மட்டும் சரியாக இருக்க முடியாமலும்கூடும் – ஏனெனில் நான் எதிர்த்து வாதாடுவதற்கு என்னிடம் சரியான ஆதாரங்கள் இல்லை ´Evegbe ´ மொழியைப்பற்றி),
   இந்த மொழி நீங்கள் குறிப்பிட்ட ஆபிரிக்க நாடு தவிர்ந்த Benin நாட்டு மக்களாலும் பேசப்படுகிறது.
   இருந்தும் கெட்டிக்காரன் அந்த மொழியின் பல மேல்கொண்ட தகவல்களை அறிவித்திருக்கிறீர்கள்.
   ஆனால் தேடியது இந்த மொழியில்லை. நான் விதிமுறைகளில் 1 வதாக நெதர்லாந்து பண்-முக அங்கத்துவர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ளக்கூடாது என்பதை அறிவித்திருக்கலாமோ என்று இப்ப கவலைப்படுகிறேன் 🙂 .
   சச்சி அண்ணைக்கு ஆட்சேபனை இல்லையேல் – நிச்சயமாக இருக்காது.
   இந்த போட்டியை மேல் தொடரலாம் என்று, மற்ற வாசகர்களுக்கு சந்தர்ப்பம் கொடுப்பதன்பொருட்டு ´Ewe´ தவிர்ந்த அங்கீகாரம் பெற்ற மொழியையும், பேசப்படும் நாடையும் அறிவித்து குறிப்பிட்ட பரிசை தட்டிச்செல்லவும்.
   நன்றி சச்சி அண்ணை உங்கள் பெருந்தன்மைக்கு!!!
   போட்டி தொடரட்டும்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   இந்த செயலின் மூலம்: ´தாங்களே போட்டியை வைத்து, தாங்களே வெல்லினம்´ என்று ஒரு மனப்பாங்கையும் உங்கள் பெருந்தன்மை வெட்டியெறியும். நன்றி.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   நாம் யாவரும் அறிந்துகொள்வதற்காக……
   Evegbe மொழியைப்பற்றி பல விடயங்களை நான் திரட்டி, அதன்பின் University of Amsterdam இல் பணிபுரியும் பழகிய புவியியல் அறப்போதகர் ஒருவருடன் தொடர்புகொண்டு உறுதிசெய்தவை பின்வருமாறு:-

   இந்த மொழியை `Ewe ` , Evegbe , Eibe, Ebwe, ´Eve ´, ´Efe ´, Eue, Vhe, Gbe, Krebi, Krebe & Pope என்றெல்லாம் அழைக்கப்படும் . இதன் பாரம்பரிய பெயர் ´Ewe ´ என்பதே ஆகும் (நான் கூறிய ´Evegbe ´ யும் தவறே).

   Ghana , Benin & Togo ஆகிய இந்த மூன்று ஆபிரிக்கநாடுகளின் அண்டியுள்ள எல்லைப்பிராந்திய வாழ் ஒரு சில மக்களால் பேசப்படும் பல மொழிகளில் ஒன்றானதாக Ewe மொழி திகழ்கிறது. மேலும் Congo & Niger நாட்டு மக்களால் இந்த Ewe மொழி பேசப்படுவது இல்லை என அவர் கூறினார், ஆனால் நான் திரட்டிய பல தகவல்களின்படி இந்த மொழியை Niger (Nigeria அல்ல!) நாட்டில் வாழும் ஒரு சிலரும் இதை பேசுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது, இதை நான் தொழில்புரியும் நிறுவனத்தின் Ivory Coast நாட்டின் கிளையிலுள்ள சகபணியாளரைக்கொண்டும் உறுதிசெய்தேன் – என்னமோ புவியியல் புலியை இந்த விடயத்தில் நம்பியே ஆகவேண்டும்.

   ஏறத்தாள 6.5 மில்லியன் மக்களால் இந்தமொழி பேசப்படுவதாகவும், எழுத்துருவம் லத்தீனான 26 எழுத்துக்களைக்கொண்டதாகவும், அத்துடன் பிறமொழிகளிலிருந்து ஊடுருவப்படாத பல சுயசொற்களை கொண்ட (!!!) இந்த மொழி பேசப்படும் நாடுகளில் அங்கீகாரம்பெறாமல் இரண்டாவது மொழியாகவே பேசப்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில் Ghana நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் இப்படியான விதவிதமான அங்கீகாரமற்ற மொழிகள் பேசப்படுவதாகவும் (சுமார் 70 மொழிகளுக்கு மேலாக) அவர் வியக்ககூடியளவில் விளக்கினார். Ghana நாட்டில் அங்கீகாரம் பெற்ற மொழி ஆங்கிலம் மட்டுமாகவும், Benin + Togo நாடுகளின் அங்கீகாரம்பெற்ற மொழி பிரெஞ்சு மொழி தனியவெனவும் உறுதிசெய்தார்.

   சுயசொற்க்களையும், எழுத்துருவமும் கொண்ட இந்த மொழியே அங்கீகாரம் பெறவில்லையென்றால், அப்ப எழுத்துருவமற்ற குவாக்கையை நாங்கள் அங்கீகாரம்பெற வைப்பது சிக்கலே.

   நன்றி சச்சி அண்ணை, உங்களால் தேர்வில்லாத கண்டமொன்றின் பல விடயங்களை நாம் அறிந்துவிட்டோம்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து