உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கனடாவின் குடிமகனான அன்டோனெட் டிராபோல்சி என்பவர், கியூபாவில் கொலை செய்யப்பட்டதை உலகளாவிய விவகார கனடாவின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அரசாங்க நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஜேசன் குங் இதுகுறித்து கூறுகையில், ‘டிராபோல்சியின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தனியுரிமைச் சட்டத்தின் காரணமாக, இந்தச் சோகமான நிலைமை குறித்து குளோபல் அபேர்ஸ் கனடாவால் கூடுதல் தகவல்களை வழங்க முடியாது. டிராபோல்சியின் உறவினர் சாமி சோசா, மொன்றியலில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேர்த்தி உதவியாளராகப் பணிபுரிந்தார்’ கூறினார்.

52 வயதான டிராபோல்சி நவம்பர் 13ஆம் திகதி இரண்டு வார விடுமுறைக்காக கியூபாவுக்குச் சென்று மறுநாள் கடற்கரைக்குச் சென்றதாகவும் பின்னர் அவர் காணாமல் போனதாகவும்  நண்பரால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடற்கரையில் இறந்து கிடந்த டிராபோல்சி மணலில் புதைக்கப்பட்டார் என்று சோசா கூறினார்.

இது வேறொரு நாட்டில் நடந்ததால், அவரது குடும்பத்திற்குத் தூதரகச் சேவைகள் வழங்கப்படுகின்றன. கனடிய தூதரக அதிகாரிகள் கியூபாவில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை சேகரிக்கின்றனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து