உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

டிரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது. குறிப்பாக கொரோனாவை கையாளுதல், வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு தகுதி பெற்றிருக்கிறார்.அவரது நிர்வாகத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? உள்நாட்டு பிரச்சனைகளை எப்படி தீர்க்கப்போகிறார்? சர்சதேச விவகாரங்களில் அவரது நிலைப்பாடு என்ன? என்பதை அறிய உலக நாடுகள் எதிர்நோக்கி உள்ளன.

ஜோ பைடன் அதிபர் ஆனால் அமெரிக்கா-சீனா இடையிலான வலுவான உறவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் அமையும் என சீன வல்லுனர்கள் கருதினர்.

இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கும் பைடன் நிச்சயம் பலவீனமான அதிபராகவே இருப்பார் என சீன அரசின் ஆலோசகர் ஜெங் யோங்னியான் கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்காவுடனான அதன் உறவுகள் தானாகவே மேம்படும் என்ற மாயையை சீனா கைவிட வேண்டும். அத்துடன், அமெரிக்கா மேற்கொள்ளும் கடுமையான நிலைப்பாட்டை எதிர்கொள்ள சீனா தயாராக இருக்க வேண்டும். நல்ல பழைய நாட்கள் முடிந்துவிட்டன… அமெரிக்காவுடன் பல ஆண்டுகளாக நிலவும் பனிப்போர் ஒரே இரவில் முடிவுக்கு வராது.

பைடன் வெள்ளை மாளிகையில் நுழைந்த பின்னர் சீனா மீதான பொதுமக்களின் கோபத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அமெரிக்க சமூகம் சிதைந்துவிட்டது, இதனை சரிசெய்வதறகு பிடனால் ஏதாவது செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை.

பைடன் நிச்சயமாக மிகவும் பலவீனமான அதிபராகவே இருப்பார். எனவே, உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாவிட்டால், அவர் ராஜதந்திர ரீதியாக ஏதாவது செய்வார். சீனாவுக்கு எதிராகவும் ஏதாவது செய்வார். டிரம்ப் போரில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் ஜனநாயக கட்சியின் அதிபரான பைடன் போர்களைத் தொடங்குவார்.என்று அவர் கூறினார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து