உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு முன் வானொன்றுடன் துவிச்சக்கரவண்டி மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ள நிலையில் நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குருமன்காட்டில் இருந்து வவுனியா நகரத்தை நோக்கி வந்த வானே துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

இவ்விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த முதியவரே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து