உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

“இந்தியாவில் பாலியல் குற்றங்கள், குறிப்பாக சிறுமிகளுக்கு நடக்கும் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக சமூகத்தில் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இருப்பினும் பாலியல் வன்முறைகள் குறையவில்லை. இந்த கருவை அடிப்படையாக வைத்து, ‘அகடு’ படத்தை உருவாக்கி வருகிறோம்” என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் எஸ்.சுரேஷ்குமார்.

படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இவர் மேலும் சொல்கிறார்: “பாலியல் குற்றங்களுக்கு எதிராக ‘அகடு’ படம் தயாராகி இருக்கிறது. பதற்றத்தை தூண்டும் திரைக்கதை.

கொடைக்கானலுக்கு 4 இளைஞர்கள் சுற்றுலா வருகிறார்கள். காமவெறி கொண்ட அவர்கள் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்.ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்தை விடியல் ராஜூ தயாரிக்கிறார்.

ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம் கார்த்திக், அஞ்சலி நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படத்தை இம்மாதம் திரைக்கு கொண்டுவர முயற்சி நடக்கிறது. படத்தின் இணை தயாரிப்பு: யுவராஜ் சிங்காரவேலு.”

 

நுங்கம்பாக்கம்

 நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் அஜ்மல். அந்த சமயத்தில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நாயகி ஹைரா வெட்டி கொலை செய்யப்படுகிறார்.

இது குறித்த தகவல் முதலில் ரெயில்வே காவல்துறைக்கு தெரிவிக்கப்படுகிறது. கொலை நடந்து 3 மணி நேரம் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், இந்த வழக்கு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு மாற்றப்படுகிறது. அஜ்மல் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லாததால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார் அஜ்மல். ஒருகட்டத்தில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தின் சுற்றியுள்ள பகுதியில் உள்ள
சிசிடிவியை ஆராய்ந்து பார்த்ததில் கொலை நடந்த சிறிது நேரத்தில் வாலிபர் ஒருவர் ஓடுவதை காணும் அஜ்மலுக்கு அவர் மீது சந்தேகம் எழுகிறது.

இதையடுத்து அந்த நபரை தேடிப்பிடித்து விசாரணையை தொடங்குகிறார் அஜ்மல். சந்தேகத்தின் பேரில் ஹீரோ மனோவிடம் விசாரணை மேற்கொள்கிறார் அஜ்மல். இதையடுத்து விசாரணையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படுகின்றன. இறுதியில் நாயகி ஹைராவை கொலை செய்தது யார் என அஜ்மல் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் மீதிக்கதை.

விஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’, சத்யராஜ் நடித்த ‘கலவரம்’, அருண் விஜய் நடித்த ‘ஜனனம்’ உள்பட பல படங்களை இயக்கியவர் டி.ரமேஷ் செல்வன், இவர் தற்போது தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுத்துள்ள படம் தான் நுங்கம்பாக்கம்.

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரத்தை தான் இயக்குனர் படமாக்கியுள்ளார். நிஜ சம்பவங்களை படமாகியுள்ள இயக்குனர் போலீஸ் விசாரணையை மையப்படுத்தி திரைக்கதையை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து