உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் காணாமற்போயுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது.

 

தையிட்டியைச் சேர்ந்த 24 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற் போயுள்ளனர்.

இருவரையும் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து