உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பொன்னாலை கடலில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.சுழிபுரம் பெரியபுலோவைச் சேர்ந்த இரு கடல்தொழிலாளர்கள் நேற்று இரவு 8மணியளவில் படகில் கடலுக்குச் சென்றுள்ளனர். குறித்த படகு விபத்திற்குள்ளாகியுள்ளது. அதில் ஒரு மீனவர் கரைதிரும்பியுள்ளதுடன் மற்றைய மீனவர் காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவத்தில் சுழிபுரம் பெரியபுலோவைச் சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் (வயது-37) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே காணாமல் போயுள்ளார்.

பிரதேச மக்களும் தொழிலாளர்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது.தொடர்ந்தும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து