உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்
உருளைக்கிழங்கு வெங்காய வடை
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
பெரிய வெங்காயம் – 2
கடலை மா – 2 டேபிள் ஸ்பூன்
சோள மா – 2 ஸ்பூன்
மிளகாய்  தூள் – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – பாதி சுண்டு விரல் அளவு
பச்சை மிளகாய் – 1 எண்ணம்
கறிவேப்பிலை –
 எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

உருளைக்கிழங்கின் தோலை நீக்கிக் கொள்ளவும். பின்னர் அதனை துருவிக்கொள்ளவும்பெரிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை தோல் சீவி நசுக்கிக் கொள்ளவும். உருளைக் கிழங்கில் உள்ள அதிகப்படியான தண்ணீரை பிழிந்து விடவும்.வாயகன்ற பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கு, நறுக்கிய பெரிய வெங்காயம், கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் பொடி, கரம் மசால் பொடி, மிளகாய் பொடி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்த மல்லி இலை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வடை பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். திக்காக வேண்டுமென்றால் சிறிது கடலை மாவு சேர்த்து கொள்ளவும்.

தாச்சியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடனதும் பிசைந்து வைத்துள்ள கலவையை கையில் எடுத்து வடைகளாகத் தட்டி போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.சுவையான உருளைக்கிழங்கு வெங்காய வடை தயார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து