உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

 நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதில் சில போலியான போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. அப்படிப்பட்ட போலியான போராட்டங்களை நடத்தும் போலிப் போராளிகளின் முகத்திரையை கிழிக்க அய்யன்’, ‘சேதுபூமி’ ஆகிய படங்களை இயக்கிய

ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இயக்கத்தில்  உருவகிவருகிறது வருகிறது ‘ஓங்காரம் திரைப்படம். வயிற்றுப்பிழைப்பிற்காக  புரட்சியாளராக வேசம் போடும் போலிப் போராளிகள் பற்றியும், அவர்கள் நடத்தும் போலியான போராட்டங்களினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் அழுத்தமாக பதிவு செய்கிறது.

சாம் ரொனால்டு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில், செல்லம் ஜெயசீலன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

மோனீஷ் பாரதி இசையமைக்கிறார். சண்டைப்பயிற்சியை பயர் கார்த்திக் கவனிக்க, மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார். கெளசல்யா ஏழுமலை தயாரிக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் பணியை ரேகா முருகன் கவனிக்கிறார்.கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.ஆர்.கேந்திரன் முனியசாமி இயகுகிறர்

 

.எல். புரடெக்‌ஷன்ஸ் சார்பில் ஜி.கரிகாலன் தயாரித்துள்ள படம் ‘சியான்கள்’.  இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார். வயது முதிர்ந்த, கிராமத்து முதயவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, மண்மனம் மாறமல் கூறும் படமாக உருவாகியுள்ளது.

 

கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நாயகன், நாயகியாக நடிக்க, நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: வயதான அப்பா, அம்மா எல்லோருக்கும் இருப்பார்கள் அவர்களை நாம் எப்படி பார்த்துகொள்ள வேண்டும் என்பதை கிராமத்து மண் சார்ந்து கூறும் படைப்பாக ‘சியான்கள்’ படம்  இருக்கும்.

இப்படத்தில்  உண்மையில் நடந்த பல சம்பவங்கள் தொகுத்து அதனை கதையில் சேர்த்திருக்கிறேன். இப்படம் ஏழு முதியவர்களின் பார்வையில் அவர்களது ஆசையை கூறும் படம். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை வயதனாவர்கள் நடத்தினால் எப்படி இருக்கும் அது தான் படம்” என கூறியுள்ளார்.

 

 

 

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து