உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நகரந்தல் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். விவசாயி.
இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரூபினி, விஜயலட்சுமி என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த சுமதி, பிரசவத்துக்காக தனது தாய் வீட்டிற்கு சென்றார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவருக்கு 3 வதாகவும் பெண் குழந்தை பிறந்தது. கடந்த 5 ம் திகதி லோகநாதன் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவி சுமதியை குழந்தையுடன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

வீட்டில் 3 வதும் பெண் குழந்தையை பெற்று விட்டாயே என மனைவியிடம் தகராறு செய்துள்ளார். நேற்று 3 மணியளவிலும் கணவன் – மனைவி இடையே மீண்டும் சண்டை வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த லோகநாதன், பச்சிளம் குழந்தையின் காலை பிடித்து தூக்கி சுவற்றில் ஓங்கி அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த குழந்தையை கண்டு அதிர்ந்த சுமதி அழுதபடியே குழந்தையை பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளார்.

தீவிர சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து சுமதி வடவணக்கம்பாடி பொலிசில் தனது கணவர் லோகநாதன் மீது புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லோகநாதனை இன்று மதியம் கைது செய்தனர்.

One Response to “பெண் குழந்தையை கொன்ற தந்தை”

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து