உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பிரிட்டனில் விசா காலம் முடிந்த பிறகும் ஆடை நிறுவனத்தில் சட்டத்திற்கு புறம்பாக பணியாற்றி வந்த நான்கு இந்தியர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தியாவை சேர்ந்த நான்கு பேர் சட்டத்திற்கு புறம்பாக பிரிட்டனில் உள்ள ஒரு ஆடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களில் 42 மற்றும் 48 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள் விசா காலம் முடிந்தவர்கள். மற்ற இருவரில் 46 வயது மதிக்கத்தக்க ஆண் அடைக்கலம் கேட்டு மறுக்கப்பட்டவர். 33 வயது பெண் சட்டத்திற்கு புறம்பாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர். இவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட உள்ள இவர்கள் பிரிட்டனில் தங்கியிருக்கும் வரை அந்நாட்டின் குடியுரிமை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். இவர்களுடன் இலங்கையை சேர்ந்த ஒரு ஆணும், பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

பிரிட்டன் பாதுகாப்பு படையின் கிழக்கு மிட்லேன்ட்ஸ் உதவி இயக்குனர் பில் டயர் கூறுகையில்,”அனுமதி இல்லாமல் இதுபோல் வெளிநாடுகளில் பணியாற்றுவது சட்டத்திற்கு விரோதமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நேர்மையான தொழிலதிபர்கள் இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக செயல்களில் ஈடுபட்டால் தண்டிக்கப்படுவர்” என்றார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து