உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வேர்க்கடலை (கச்சான்) கத்தரிக்காய் குழம்பு

தேவையான பொருள்கள்:
வேர்க்கடலை (கச்சான்)- 1/2 கப்
கத்தரிக்காய் – 1
தேங்காய் துண்டு – 2
கடுகு – 1 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு -1 ஸ்பூன்

சீரகத்தூள் – 1 ஸ்பூன்
புளிக்கரைசல் – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 5
மிளகாய்த்தூள் – 1 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

கத்தரிக்காய், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.முதலில் வேர்க்கடலையை நன்றாக அலசி கொண்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், கத்தரிக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு வேக வைத்த வேர்க்கடலை, புளி கரைசல், மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த தேங்காய் ஆகியவை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். தேவைப்பட்டால் கொஞ்சம் உப்பு சேர்த்து கொள்ளவும்.குழம்பு பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும்.

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து