உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கலவரத்தை தூண்டிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது பிரதிநிதிகள் சபையில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்படும் என சபாநாயகர் நான்சி பெலோசி அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.குறித்த கடிதத்தில் ட்ரம்ப் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து அது தொடர்பான வாக்கெடுப்புக்கு தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேநேரம், ட்ரம்ப் தொடர்ந்தும் பதவியில் நீடிக்க கூடாது என்பதால், அரசியலமைப்பின் 25ஆவது சட்டதிருத்தத்தின்படி, ட்ரம்ப்பை பதவியில் இருந்து நீக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நடவடிக்கை எடுப்பதே பொருத்தமாக இருக்கும் எனவும் பெலோசி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து