உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பரத்மோகன் இயக்கத்தில் பரத், சோனாக்‌ஷி சிங் ராவத், ஜனனி நடிப்பில் உருவாகி வரும் ‘யாக்கை திரி’ முக்கோண காதல் கதையுடன் உருவாகும் புதிய படம், ‘யாக்கை திரி’. இதில் ஹீரோவாக பரத், நடிக்கிறார் ஜோடியாக சோனாக்‌ஷி சிங் ராவத், ஜனனி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். சோனாக்‌ஷி சிங் ராவத், கொல்கத்தாவைச் சேர்ந்தவராக நடிக்கிறார்.

பிரதாப்போத்தன் அப்பா வேடத்தில் நடிக்கிறார். பகவதி பெருமாள், பாண்டியராஜன், சுதாசந்திரன், ஞானசம்பந்தம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பரத்மோகன் இயக்கும் இப்படத்தை, எஸ்.சபரீஷ்குமார் தயாரிக்கிறார்.

இசைக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்துக்கு அரோல் கரோலி இசையமைக்கிறார். படத்தில் 4 பாடல்கள் இடம்பெறுகின்றன. நீண்ட நாட்களுக்குப்பின், பாம்பே ஜெயஸ்ரீ ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

 

‘வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் அடுத்ததாக இயக்கவுள்ள படம் ‘டிரைவர் ஜமுனா’. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக, எஸ்.பி.செளத்ரி மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் தயாராக உள்ளது. இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். கிரைம்  த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி  டிரைவராக நடிக்கிறார். அவருடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இன்றைய கால கட்டத்தில், தினசரி வாழ்க்கையில், கால் டாக்ஸி டிரைவர்களை கடந்து போய் வருகிறோம். ஒரு நடுத்தர குடும்பத்து பெண், கால் டாக்ஸி டிரைவரை, மையமாக  கொண்டு கிரைம் திரில்லர் படமாக இது உருவாக உள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது.

 

வசதியான ஐந்து நண்பர்கள் தனது காதலிகளுடன் பைக்கில் சுற்றுலா செல்கிறார்கள்.

இதில் நாயகன் ராகவ்வின் காதலி லூதியா, ஒரு புதிய ஆப் இருப்பதாகவும் அதில் பிறந்த தேதியை பதிவு செய்தால் இறப்பு தேதியை தெரிவிக்கும் என்றும் கூறுகிறார்.

இதை நம்ப மறுக்கும் நண்பர்கள் ஒரு கட்டத்தில் அனைவருடைய பிறந்த தேதியும் பதிவு செய்கிறார்கள். அப்போது அனைவரும் ஒரே நாளில் இறக்க இருப்பதாக அதில் காண்பிக்கிறது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடையும் நண்பர்களுக்கு சில அமானுஷ்ய சம்பவங்களும், நண்பர்களின் இறப்புகளும் ஏற்படுகிறது

இறுதியில் அந்த ஆப் – பில் இருப்பது போல் அனைவரும் இருந்தார்களா? இல்லையா? எதனால் அவர்களுக்கு இப்படி நடக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.இயக்கம் : டாவின்சி சரவணன் ,இசை : இளங்கோ கலைவாணன் ,ஓளிப்பதிவு : அனில் கே சாமி

.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து